2011-ம் ஆண்டு Tablet கணனிகளினது ஆண்டாக இருந்தது. ஆப்பிள், சம்சங், பிளக்பெரி, சோனி, அமேஜன் எனப் பல நிறுவனங்கள் தமது Tablet கணனிகளைக் களமிறக்கின. 2012இல் பல புதிய தொழில்நுட்பங்கள் கைப்பேசிகள், கணனிகள், தொலைக்காட்சிகளில் போன்றவற்றில் வரவிருக்கின்றன. 2012-01-10-ம் திகதி அமெரிக்காவின் லாஸ் வெகஸில் ஆரம்பமாகும் International Consumer Electronics Show இல் இதற்கான அதிரடித்தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம். மிகவும் பெரிய இடத்தில் இந்த கண்காட்சி நடக்கவிருக்கிறது. அதை முழுக்கப் பார்க்க ஒருவர் 25கிலோ மீட்டர்வரை நடக்க வேண்டி இருக்கும். பல முன்னணி இலத்திரலியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கேற்கவிருக்கின்றன.
சாம்சங்கின் Galaxy Nexus
இந்த ஆண்டு நடுப்பகுதியில் சாம்சங்கின் Galaxy Nexus அதிரடியாக வரவிருக்கிறது. இதில் 4G தொழில்நுட்பத்துடன் 1.5GHz dual-core processor இருக்கும்.
குரலுணரி - Voice recognition
இந்த ஆண்டில் பெரிதாக அடிபடப்போவது குரலுணரி - Voice recognition தொழில்நுட்பம். ஆப்பிள் நிறுவனம் தனது Siri என்னும் செல்லப் பெயருடைய 'personal assistant’ தனிப்பட்ட உதவியாளரை அறிமுகப்படுத்தி குரலுணரி - Voice recognitionதொழில் நுட்பத்திற்கான போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. Siri உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும், சில நடவடிக்கைகளைச் செய்யும். இனி மற்றக் கைப்பேசி உற்பத்தியாளர்களும் தங்கள் கருவிகளின் குரலுணரி - Voice recognitionகளைப் புகுத்துவர்.
விண்டோஸ் -8
மைக்குரோசொஃப்ற் தனது அடுத்த விண்டோஸ்-8 ஐ2012 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவிட இருக்கிறது. தொடுதிரைத் தொழில் நுட்பம் இதில் உள்ளடக்கப்படவிருக்கிறது. 128 bit Operating Systemம் இதில் இருக்கும். Task Manager தேவையற்ற செயலிகளை இடை நிறுத்தும். இது HyperV virtualization.
கைப்பேசிகள் மூலமான பணக் கொடுப்பனவுகள் அதிகரிக்கும்
2012இல் கைப்பேகளினூடாக செய்யப்படும் பணக் கொடுப்பனவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கைப்பேசித் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து Isis என்னும் மென்பொருளை பணக்கொடுப்பனவிற்காக உருவாக்கியுள்ளன.
ஐ-பாட் 3
2012இல் ஆப்பிள் தனது ஐ-பாட் 3ஐ வெளிவிடவிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்:
- Higher resolution display
- GLONASS support (next to GPS) [not available in wifi-only model]
- The inside of the device has been completely redesigned (iFixit must love this!)
- Improved cameras
- Some sort of a price drop, unknown what exactly. Possibly a $399 iPad 2. iPad 3 starts at $499, but there will be some sort of a price drop for at least one of the iPad models.
- Bluetooth 4.0
- Runs on the successor of the A5 processor
- No separate CDMA and GSM models, world tablet (CDMA + GSM)
- UMTS/HSDPA/HSUPA (850, 900, 1900, 2100 MHz); GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz); CDMA EV-DO Rev. A (800, 1900 MHz)
- No proximity sensor
- Improved speakers
- Similar, but not exactly the same design
ஐ-பாட் 3 உடன் ஒரு ஐ-பாட் மினியும் வரவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஐ-பாட் மினி Kindle Fireஇற்கு போட்டியாக குறைந்த விலையில் வரும் என்கிறார்கள்.
தொலைக்காட்சிகள்
2012இல் வரவிருக்கும் காட்சிகள் கணனிகளையும் இணைத்தவையாக இருக்கும். பல 3D தொலைக்காட்சிகளை எதிர்பார்க்கலாம். LGஇன் 55-inch OLED TV பெரும் மாற்றங்களுடன் வரவிருக்கிறது. இது முதல் 55'' தொலைக்காட்சியாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment