Hormones and Behavior என்னும் சஞ்சிகையில் சைவச் சாப்பாடு சாப்பிடுபவர்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக படுக்கை அறையில் இன்பம் அனுபவிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைவ சாப்பாட்டுக்காரர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
Michael Wasserman என்பவர் தலைமையில் பதினொரு மாதங்களாக குரங்குகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் Hormones and Behavior என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
உகண்டாவில் உள்ள Kibale National Parkஇல் red colobus monkeys என்னும் குரங்கினங்களில்ஆய்வுகள் நடாத்தப்பட்டன. அக்குரங்குளின் சாப்பாட்டையும் அவற்றின் நாளாந்த நடவடிக்கை பாலியல் செயற்பாடுகள் போன்றவற்றை ஆய்வாளர்கள் பதிவு செய்தனர்.
சோயா அவரையில் உள்ள tofu மற்றும் பல காய்கறிகளில் உள்ள பதார்த்தங்கள் பாலியல் ஹோமோன்களை ஊக்குவிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. phytoestrogens எனப்படும் பாலியல் ஹோமோன்கள் காய்கறிவகைக்களில் நிறைய உள்ளன.
Wasserman இன் முடிபு: 'By altering hormone levels and social behaviors important to reproduction and health, plants may have played a large role in the evolution of primate, including human, biology in ways that have been under-appreciated.'
மனிதரினதும் மிருகங்களினதும் பரிணாம வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் இனப்பெருக்கத்திலும் தாவரங்கள் வகித்த பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்ராக்கியில் உள்ள Bellarmine University இல் செய்த ஆய்வுகளில் மாமிசம் உண்ணும் ஆண்கள் தாம் அதிக ஆண்மையுள்ளவர்கள் என்று நம்புகிறார்கள் என்று சொல்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment