தொலைபேசியில் முகத்தில் நகக் கீறல்களுடன் ஒரு அப்பாவிக்கணவன்: "யெஸ் மா நான் உங்க சொல்லைக் கேளாமல் இவளைத் திருமணம் செய்தது பெரிய தப்புத்தான். நீங்கள் சொன்னது போலே அவ ஒரு பத்திரகாளிதான். ஒரு சின்ன விசயத்தையும் பெரிதாக்கி சண்டை போடுகிறாள். தினசரி அடிபிடிதான். உங்க அறிவுரையைக் கேட்காமல் இவளைத் திருமணம் செய்ததால் இப்போது நன்றாக அனுபவிக்கிறேன். என்னது நீங்க இவளோடு பேசப் போகிறீர்களா? டோட்டல் வேஸ்ற். அவ உங்க சொல் கேட்க மாட்டா. சரி நீங்க இவளோடு பேச வேண்டும் என்கிறீர்கள். சரி பேசுங்க. ஏய் உன் அம்மா உன்னோடு பேச வேண்டுமாம் இந்தா பேசு."
மகன்: அப்பா ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும்?
தந்தை: இன்னும் நான் கணக்கு முடிக்கவில்லை. இன்றும் செலவழித்துக் கொண்டே இருக்கின்றேன்.
திருமணமாகி முதலிரவிலேயே அவன் விவாக இரத்துச் செய்ய முடிவு செய்துவிட்டான். நடந்தது இதுதான். முதலிரவு முடிந்ததும் அவன் பழக்க தோசத்தால் அவளிடம் நூறு டாலர்களைக் கொடுத்தான். அவளும் பழக்க தோசத்தில் மிகுதிப் பணம் என்று சொல்லி இருபதைந்து டாலர்களைக் கொடுத்தாள்.
ஒரு பப்பில்(மதுபான உணவகம்) இருந்து மதுவருந்திக் கொண்டிருந்த ஒரு கவர்ச்சிகரமான பெண்ணை கலாய்ப்பதற்காக அவள் அருகில் சென்று உன்னை இதற்கு முன்னர் எங்கோ சந்தித்ததாக ஞாபகம் என்றான். அதற்கு அவள் கொடுத்த பதில். ஆம் நான் பைத்தியக்காரர் மருத்துவ மனையில் receptionist ஆக வேலை செய்கிறேன் என்றாள்
அந்த முடி திருத்தகத்திற்கு(சலூன்) ஒருவன் நுழைந்து நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று வினவினான். அவனுக்கு இன்னும் இரு மணித்தியாலங்கள் என்று பதில் கூறப்பட்டது. அடுத்த நாளும் அவன் வந்து அதே கேள்வி இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் அதே பதில் இன்னும் இரு மணித்தியாலங்கள். அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து சிலநாட்கள் இப்படி நடந்தது. கடைசியில் விசனமடைந்த முடிதிருத்தக உரிமையாளர் தனது உதவியாளாரை அழைத்து இவனைத் தொடர்ந்து சென்று பார் இவன் என்னிடம் இப்படிக் கேட்டுவிட்டு எங்கு போகிறான் என்ன செய்கிறான் என்று. பின் தொடர்ந்து சென்ற உதவியாளர் பின்னர் வந்து சொன்னான் பாஸ் அவன் உங்க வீட்டுக்குள் நுழைந்தான் என்று.
வயிற்றில் பிள்ளை இருக்கும் போது எந்தக் கடவுளைக் கும்பிட்டால் அசிங்கமான பிள்ளை பிறக்கும்?
உன் அம்மாவைக் கேள் சரியான பதில் கிடைக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment