Tuesday, 17 July 2012

நகைச்சுவைக் கதை: சொர்க்கத்தில் நடந்த திருமணம்

சுகந்தனுக்கு 16 வயது சுமதிக்கு 14 வயது அவர்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டனர். ஒன்றாகச் சுற்றுவது. கள்ளத்தனமாக பலான படங்கள் பார்ப்பது என்று உல்லாசமாக இருந்தனர். பாவம் அவர்கள். ஒரு நாள் தெருவைக் கடக்கும் போது வாகனத்தில் மோதுண்டு இருவரும் இறந்து விட்டனர்.

விபத்தில் இறந்த சுகந்தனும் சுமதியும் சொர்க்கம் சென்றனர். அங்கு அவர்கள் போனவுடன் முதலில் அவர்கள் தங்களுகுத் திருமணம் செய்து வைக்கும்படி அங்குள்ளவர்களைக் கெஞ்சி மன்றாடினர். அவர்களை சிலகாலம் பொறுத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டது.

சுகந்தனும் சுமதியும் 15 ஆண்டுகள் பொறுத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஐயர் சைவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார். அவர்கள் இல் வாழ்க்கை இனிதே போய்க்கொண்டிருந்தது. சொர்க்கத்திற்கு புதிதாக வந்த ஒரு இளம் பெண்ணை சுகந்தன் சைட் அடிக்கத் தொடங்க அவர்கள் இருவருக்கும் இடையில் பெரும் சண்டை மூண்டது. இறுதியில் இருவரும் விவாக இரத்துச் செய்வதாக முடிவு செய்தனர். இருவரும் சொர்க்கத்தில் இருப்பவர்களிடம் தமக்கு விவாக இரத்துச் செய்து வைக்கும் படி மன்றாடினர். "உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு ஐயர் இங்கு வருவதற்கு நாம் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது விவாக இரத்துக் கேட்கிறீர்கள். இங்கு ஒரு சட்ட அறிஞர் ஒரு நாளும் வரப்போவதில்லை. அதனால் உங்களுக்கு விவாக இரத்துச் செய்ய முடியாது" என்று சுகந்தனுக்கும் சுமதிக்கும் பதில் கூறப்பட்டது.

1 comment:

சிந்தையின் சிதறல்கள் said...

சட்ட அறிஞர்கள் எங்க நண்மை செய்கிறார்கள் படிப்பினை உள்ளது பாராட்டுகள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...