இக்கலவரம் தொடர்பான கதைகள் 1980இல் இருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பீக்க வேண்டும். இலங்கையில் தென் பகுதியில் அவர்கள் சொத்துக்களை அழித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து 1980இல் இருந்து பரவி வந்தது.
திட்டமிட்டவர்கள்: சிங்களப் பேரின வாதிகள்.
சம்பந்தப் பட்டவரகள்: அரசியல் கட்சிகள், காவல்துறையினர், அரச படையினர், காடையர்கள்.
ஜேவிபியின் பங்கு
அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டது என்றும் கூறப்பட்டத்து. அதேவேளை தமது போராட்டத்தை நசுக்கிய இந்தியாவைப் பழிவாங்க ஜேவிபி திட்டமிட்டதாம். அத்துடன் தமிழ் முதலாளிகளுகு எதிரான தனது நடவடிக்கையையும் எடுக்கத் திட்டமிட்டதாம். விளைவு கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத வட இந்தியரும் அவர்களது சொத்துக்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப் பட்டன. ஹைட்ராமணி, குண்டன்மால்ஸ், ஜஃப்ர்ஜீஸ் போன்ற தமிழர் அல்லாதவர்களின் நிறுவனங்கள் தாக்கியழிக்கப் பட்டன. இந்த இனக் கொலை ஒருவாரமாக நடை பெற்றது.
இந்தியாவிற்கு தெரியாதா?
இந்தியாவின் உளவுத்துறை இலங்கையில் நன்கு செயற்பட்டு வந்தது. இதற்கான சான்று:
இலங்கையில் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த ஆயுதப் புரட்சியைஅடக்கியவிதம். இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன. ஜேவிபியின் புரட்சி அடக்கப் பட்டது.
இப்படிப்பட்ட இந்தியாவிற்கு இலங்கையில் பாரிய இனக்கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டது தெரியாமல் இருந்திருக்குமா?
அப்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் பலம் என்ன?
பங்களாதேசப் போரின் போது இலங்கையூடாக பாக்கிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்காவிமன நிலையத்தைப் பாவித்து பறப்புக்களின் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்தபாது அப்போதைய பாதுகாபபு அமைச்சர் ஜெகஜீவன் ராம் கூறியது: இலங்கை எமக்கு எதிராக செயற்படுமானால் ஒன்பது நிமிடங்களில் எம்மால் இலங்கையை எமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட இந்தியா ஒருவாரமாக நடந்த இனக் கொலையை தடுக்க முடியாமற் போனது ஏன்?
எங்க ஏரியா உள்ளே வராதே! This is my backyard.
1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தான் செல்லும் நாடுகளில் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனையப் பற்றி கதைத்து வந்தார். கதைத்து அவர் வலியுறுத்தியது: இலங்கையின் இனப்பிரச்சனை எனது நாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எனது நாட்டின் பாது காப்புடனும் பிராந்திய ஒருமைப் பாட்டுடனும் சம்பந்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை வலியுறுத்தி அதைப்பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். இலங்கையை தனது பிடிக்குள் இறுக்கினார் இந்திரா அம்மையார். இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்று இனக் கொலை அனுமதிக்கப் பட்டதா?
இந்திய சந்தர்ப்ப வாதம்
1983-ல் இலங்கையில் நடந்த கலவரத்தை ஒரு இனக்கொலை என இந்திரா காந்திய கூறியிருந்தார். இந்திய சட்டாவாளர்கள் சபையும் அதையே தெரிவித்திருந்தது. மூன்று இலட்சம் பேருக்கு மேல் 2008-09இல் கொல்லப்பட்டதை இந்தியப் பாராளமன்றத்தில் ஒரு இனக்கொலை என இந்தியப் பொதுவுடமைக் (கம்யூனிச) கட்சியின் திரு ராஜா பேசியபோது அது இந்தியப் பாரளமன்றத்தின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. 2008-09இல் நடந்தது ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையே என இந்தியாவின் பிரதிந்தி 2009இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் தெரிவித்து இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை பாராட்டும் தீர்மானமாக திரித்தார். தனது தேவைக்கேற்ப இந்தியா தனது கருத்தை மாற்றி இலங்கைத் தமிழர்களை அழிப்பதை ஊக்குவித்தும் உடந்தையாகவும் இருந்து வருகிறது. இன்றும் இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகின்றது. இதைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் நடாத்தும் கல்கிப் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:
- பல காலமாகத் தரப்பட்டு வரும் பயிற்சி இது. இந்நாள் ஜெயலலிதா, கருணாநிதி பிற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டு இலங்கை பயிற்சி விமானிகள் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவில் எங்குமே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று ஜெ. குரல் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற எதிர்ப்புகளால் இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படாது; அந்த இலக்கை அடைவது மேலும் கடினமாகும். தேவை சாணக்கியம் ஆத்திரமல்ல.
தமிழின விரோதியான சோ என்னும் சொறி நாய் இப்படிக் குரைக்கிறது:
- என்னைப் பொறுத்தவரையில் சொல்கிறேன். இலங்கையும், இந்தியாவும் நட்பு நாடுகள்தான் அதுவுமின்றி இரண்டு நாடுகளும் சார்க் அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அமைப்பில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு இந்த மாதிரி பயிற்சிகளில் உதவுவது என்பது வழக்கம் என்று தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது ஆட்சேபத்துக்குரிய விஷயமல்ல என்பது என் கருத்து.
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை பாக்கு நீரிணையின் இரு புறத்திலும் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
2 comments:
சத்தியமான உண்மை இந்தியா என்றோரு நாடு உள்ள வரை தமிழன் என்ற இனம் எங்கும் நிம்மதியாய் வாழ முடியாது. வாழ விடவும் மாட்டாது.
மேனன்கள் இருக்கும் வரை அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கும்.
Post a Comment