கண்ணில் தோன்றி
கன்னம் வழியோடி
நிலத்தில் வீழ்ந்து
மறைந்து போவதால்
காதலும் கண்ணீர் போலே
தீ எனத் தோன்றி
உதட்டில் உரசி
நெஞ்சில் புகைத்து
சாம்பலாய் போவதால்
காதலும் சிகரெட் போலே
அப்பா கேட்டார்
அப்படி என்னாடா
கண்டாய் அவளிடம்
யாரும் அறியார்
யாருக்கும் உன்னில் தெரியாதது
எனக்குத் தெரிந்தது என்பதை
வாரி வாரிக் கொடுத்தது
வற்றாது எஞ்சியிருக்கிறது
அன்பு
மழையடிக்குது குடை வேண்டாம்
குளிரடிக்குது போர்வை வேண்டாம்
தாகத்திற்கு தண்ணீரும் வேண்டாம்
அவள் என்னருகே
அவளில்லாவிடில்
ஒன்றுமே இல்லாத வெறுமை
அவளருகிருந்தால்
ஒன்றுமே தெரியாத நிலைமை
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

1 comment:
உருக வைக்குது வரிகள்...
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
Post a Comment