இந்தியாவின் IPLஇற்குப் போட்டியாக இலங்கையில் SLPL தொடங்கப்பட்டு 20ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கான உரிமம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. அதற்கான அந்த நிறுவனம் பெரும் தொகைப் பணத்தை பக்சராஜாவிற்க்ம் பாயகோத்தாவிற்கும் வழங்கியிருந்தது. அதில் விளையாடுவதற்கு பல பாக்கிஸ்த்தான் வீரர்கள் முன் வந்தனர். கியூபா, இரசியா, மாலை தீவு, சீனா, ஜிம்பாப்வே, தாய்லாந்து ஆகிய முன்னணிக் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். Matara Murderers, Kandy Killers, Badulla Butchers, Colombo Criminals, Ruhunu Rioters, Rajaratta Rascals, Anuradhapura Assasins ஆகிய அணிகள் SLPL 20/20. தொடக்க நாள் விழாவில் நடிகை பிசின் கலந்து கொண்டு குத்து டான்ஸ் ஆடினார். முதல் நாள் இரவு முழுக்க பக்சராஜவின் குடும்பத்தால் குத்தப்பட்ட களைப்புடன் நடிகை பிசின் அற்புதமாக நடனமாடினார்.
சகல அணிகளும் வேறு வேறு நாடுகளில் இருந்து பல Kandy Killers மட்டும் ஆப்கானிஸ்த்தானில் இருந்து ஒரு வீரரை தமது அணியில் விளையாட விலைக்கு வாங்கி இருந்தனர். அப்துல் அகலவாய்பாத் என்னும் பெயர் கொண்ட அந்த வீரர் தான் முதல் நாள் ஆட்டத்தில் விளையாடப் போகிறேன் என்ற பெருமையுடன் இருந்தார். அவரது Kandy Killers அணி Matara Murderers அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் துடுபெடுத்து ஆடிய Matara Murderers அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய Kandy Killersஅணி 19 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு 24 ஓட்டங்கள் எடுப்பது சாத்தியமில்லை எனப் பலரும் கருதினர். Matara Murderers அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்த்தான் வீரன் அப்துல் அகலவாய்பாத் மிகவும் முதல் பந்தில் ஒரு சிக்ஸர், அடுத்த மூன்று பந்துகளுக்கும் மூன்று பவுண்டரி ஐந்தாவது பந்தில் ஒரு மீண்டும் ஒரு சிக்சர் அடித்து Kandy Killers அணியை வெற்றி பெறச் செய்தான்.
தனது முதல் நாள் ஆட்டத்திலேயே அசத்தி விட்டேன் என்ற பெருமையுடன் தனது தாயாருக்கு தனது கைப்பேசியில் அழைப்பு விடுத்து தனது சாதனையைக் கூறினான். அதற்குத் தாயார் "உனது தந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். கப்பம் கேட்கிறார்கள். உனது ஒரு அண்ணன் கைக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டான். இன்னொரு அண்ணன் கண்ணி வெடியில் கால் வைத்து இறந்து விட்டான். பத்திரிகை நிருபரான உனது அக்காளைக் காணவில்லை. உனது தங்கைகள் இருவரை யாரோ கற்பழித்துவிட்டார்கள். அதில் ஒருத்தியின் மூக்கை கடித்து துண்டெடுத்து விட்டாங்கள். மற்றவள் உடல் முழுக்கக் காயம். இருவரும் ஒரு பாலத்தின் கீழ் பிணமாகக் கிடந்தார்கள். என்னிடம் இருந்த பணம் யாவற்றையும் யாரோ திருடி விட்டாங்கள். உனது கிரிக்கெட் விளையாட்டை ஆசையுடன் பார்க்க இலங்கை வந்த எமது குடும்பத்திற்கு நடந்த கதியைப் பார்" என்றாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment