ஈரலிப்பான குளியலறையில் இருக்கும் சவர அலகில் (Razor) ஐந்து மில்லியன் நுண்கிருமிகள் இருக்கின்றன. நல்ல வெட்பக் கால நிலையில் இவை இருபது மில்லியன்களாக அதிகரிக்கும். பற்தூரிகை (toothbrush) கைப்பிடிகளில் இதே அளவு நுண்கிருமிகள் இருக்கின்றன.
ஒரு கைப்பேசியில் ஆயிரம் வரை நுண்கிருமிகள் இருக்கின்றன. ஒரு கழிப்பறை இருக்கையில் (toilet seat) இருப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு நுண்கிருமிகள் கணனிவிசைப்பலகையில்(Keyboard) இருக்கின்றன.
Super market Trolley இன் கைப்பிடியிலும், மாடிகளின் ஏறும் போது கைப் பிடிக்க வைத்திருக்கும் இரும்புக் கம்பிகளிலும் நிறைய நுண்கிருமிகள் இருக்கின்ற்ன.
தலைவாரிகள்(சீப்புக்கள்)
வாரந்தோறும் சுடுநீரில் கழுவ வேண்டும். ஒரு மில்லி மீற்றர் தடிப்பான தலைமுடி சிக்குப்பட்டிருந்தால் அதில் 50,000 வரையிலான கிருமிகள் இருக்கலாம்.
காலணிகள்
250 இருந்து 500 மைல்கள் நடந்தவுடன் மாற்றவேண்டும். பழையகாலணிகளில் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளிலும் பார்க்க 100 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு.
பற் தூரிகை(toothbrush)
பற்தூரிகைகள் மூன்று மாதத்திற்கு ஒருதடவை மாற்ற வேண்டும். அதற்கு மேல் பாவித்தால் அதன் பயன்படுதன்மை குறைகிறது.
Bras
உங்கள் Bra களை நாற்பது தடவை துவைத்த பின் பாவிக்கக் கூடாது அல்லது மூன்று மாதங்களுக்கு மேலும் பாவிக்கக் கூடாது. அதன் பின் அங்கு அதிக கிருமிகள் சேரும் அத்துடன் அதன் காப்புத் தன்மையும் குறைந்துவிடும். Department Of Sport And Exercise Science at the University of Portsmouth இன் கணிப்பின் படி ஒரு பெண் ஒரு மைல் அசைந்தால் அவளது மார்பு 135 மீட்டர் குலுங்குமாம். ( எப்படிக் கணக்குப் பண்ணினாங்க?)படுக்கைகள்
வாரந்தோறும் கழுவ வேண்டும். எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு ஒருதடவை உங்கள் படுக்கைகளைப் புதுப்பிக்க வேண்டும். எமது படுக்கையில் ஒரு இரவில் அரைப் பைந்த் வேர்வையை நாம் வெளிவிடுகிறோம். ஆண்டு ஒன்றிற்கு ஒரு இறாத்தல் தோலை உதிர்க்கிறோம். house dust mitesஎன்னும் சிறு பூச்சிகள் 10,000 எமது படுக்கையில் இருக்கின்றன. அவை இருபது இலட்சம் மலம் கழிக்கின்றன.
துவாய்கள் (bath towels)
வாரந்தோறும் துவைக்க வேண்டும்.
தலையணைகள்
ஒவ்வொரு மூன்று மாதமும் துவைக்க வேண்டும். ஆறு மாதங்களில் புதிதாக மாற்ற வேண்டும்.
அங்குள்ள கிருமிகளின் கழிவுகளை சுவாசிப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.
ஸ்பொன்ஞ்(Sponges)
தினசரி கிருமி நாசினி மூலம் துப்பரவாக்க வேண்டும். ஒரு நாள் பாவித்தவுடன் ஒரு பில்லியன் கிருமிகள் அங்கு வசிக்கும்.
ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட சில தமிழர்களுக்கு இல்லை. |
No comments:
Post a Comment