கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகள் போன்றவை எதுவுமின்றி படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கை சமூகவலைத்தளங்கள், கைபேசித் தகவல்கள், செய்மதித் தொலைக்காட்சிகள் போன்றவற்றால் பதவியில் இருந்து விரட்டினர் எகிப்திய மக்கள். பல இழுபறிகள் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் எகிப்தில் அரசத் தலைவருக்கான தேர்தல் முடிவடைந்து இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)ஐச் சேர்ந்த முகம்மது முர்சி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் படைத்துறையினருக்கும் இடையிலான பதவிப் போட்டிகளுக்கும் அதிகார இழுபறிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்குமா?
அமைதிப் புரட்சி
எகிப்திய எழுச்சி
ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர்.
ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக்
காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள்
தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக
மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது.
எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை
வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற
அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர். அஸ்மா மஹ்பூஸ்
தனது தற்கொலை முயற்ச்சியுடன் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள்
முகப்புத்தக மூலம். ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது
செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர்.
இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர
நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. எழுச்சிக்காரர்களை அடக்க முபாரக்
தங்கிகள் கவச வாகங்னகள் சகிதம் தனது படையினரை அனுப்பினார். படையினரைக்
கண்டு மக்கள் அஞ்சவில்லை. மக்களின் உறுதிப்பாட்டைக் கண்ட படையினர் அவர்களை
ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தயங்கியது. படையினர் எம்மவர் என்ற அணுகு
முறையை எழுச்சிக்காரர் கையாண்டனர். விரைவில் படையினருக்கும் எழுச்சிக்
காரர்களுக்கும் இடையில் நல்ல உறவு மலர்ந்தது. எகிப்தியப் படைத்துறை
முபராக்கின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று மேற்கத்திய ஊடகங்கள் தம்
வயிற்றெரிச்சலைக் கொட்டின.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய
சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன்
உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு
படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும்
இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார
நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு
விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர்
அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு
மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி
வருவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பன்முகத்தன்மையாளர்கள்-Pluralists
எகிப்தியப் புரட்சியை முன்னின்று நடாத்திய இளைஞர்கள் எகிப்தில் ஒரு மதசார்பற்ற பெண்களை மதிக்கும் ஆட்சி அமைவதையே விரும்பினர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு மதவாத பெண்களின் உரிமைகளை மதிக்காத அமைப்பாகக் கருதப்படுகிறது. அணமைக் காலங்களாக தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP) பெண்களின் உரிமைகளை மதிப்பது போல் காட்டி வந்தது. தேர்தலில் வெற்ற பின்னர் அது எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எகிப்தியப் புரட்சிக்கு வித்திட்ட ஏப்ரல் - 6 இயக்கம் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)வேட்பளர் முகமட் முர்சிக்கு ஆதரவு வழங்கியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எகிப்த்தில் உள்ள இசுலாமியர் அல்லாதவர்கள் இசுலாமிய சகோதரத்து அமைப்பை விரும்பவில்லை. பல மத்திய தர மக்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை விரும்பவில்லை. மற்ற மதங்களையும் பெண்களையும் மதிப்பது தொடர்பாக துருக்கியை கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டு வரும் இசுலாமிய மதவாதக் கட்சியின் சில ஆலோசனைகளை எகிப்திய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு இசுலாமிய ஷரியா சட்டங்களை அமூல் படுத்தி ஏப்ரல் - 6 இயக்கம் உட்படப் பலரிற்குத் துரோகம் செய்யுமா?
படைத்துறையினர்
பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கின் படைத்துறையினர் இப்போதும் அதிகாரங்களைத் தம் கையில் வைத்திருக்கின்றனர். தேர்தல் படைத்துறை வேட்பாளருக்கும் முகமது முர்சிக்கும் இடையில் கடும் போட்டி இருந்ததை உறுதி செய்கிறது. முர்சி 51.3% வாக்குகளும் படைத்துறை வேட்பாளர் 48.7% வாக்குகளையும் பெற்றிருந்தனர். இப்போதும் படைத்துறையினர் வசம் நிறைய அரசமைப்பு ரீதியான அதிகாரங்கள் இருக்கின்றன. படைத்துறையின் உச்ச சபை (Supreme Council of Armed Forces). பாராளமன்றத்திற்கா அல்லது படைத்துறையின் உச்ச சபைக்க அதிக அதிகாரங்கள் உள்ளது என்ற கேள்வி தொடர்பாக ஒரு குழப்ப நிலையே நிலவுகிறது. எகிப்திய அரச செலவில் 30% மேலானவை படைத்துறை சார்ந்தவை. எகிப்திய ஆட்சியில் தமது பிடியை இலகுவில் படைத்துறையினர் விட்டுக் கொடுப்பார்களா என்பது பெரும் கேள்வியாக இன்று இருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே படைத்துறையின் உச்ச சபை (Supreme Council of Armed Forces) தனது அதிகாரங்களைத் தானே கூட்டிக் கொண்டது. மார்ச் 2011 இல் பிரகடனப் படுத்தப்பட்ட அரசியலமைப்பின் யாப்பிற்கு எட்டுத் திருந்தங்களைச் செய்தது. அதன் படி படைத்துறை சம்பந்தமாக சகல முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை உச்ச சபை (Supreme Council of Armed Forces) தன்வசமாக்கியதுடன் புதிய யாப்பு அமைக்கும் போது தனக்கு இரத்து அதிகாரமுடையதாகவும் செய்து கொண்டது. எகிப்தியப் பாராளமன்றமும் அதிபர் தேர்தலுக்கு முன்னர் படைத்துறையினரால் கலைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்ற எகிப்தின் படைத்துறையின் உயர் அதிகாரிகள் எகிப்தை ஒரு இசுலாமிய நாடாக மாற்றப் படுவதை விரும்பவில்லை என்பதை இது உணர்த்துகிறது.இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஈரானுடன் நெருங்கிச் சென்றால் அமெரிக்க ஆதரவு படையினர் சும்மா இருப்பார்களா?
இஸ்ரேல்
இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் Freedom and Justice Party (FJP)வேட்பளர் முகமட் முர்சியின் வெற்றியால் இஸ்ரேல் அதிக கலவரம் அடையலாம். ஜெருசலத்தை மீட்பதே எம் முதல் இலக்கு என சில இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளதை இஸ்ரேல் தனது கரிசனைக்கு எடுத்துக் கொண்ட்டுள்ளது. இஸ்ரேல் மீது சில தாக்குதல்களுக்கு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உத்தரவிட்டதாகவும் வந்தந்திகள் பரவியுள்ளன. 25/06/2012 புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் முகமட் முர்சி இஸ்ரேலுடனான எகிப்தின் 1979 செய்யப்பட்டCamp David உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் ஈரானுடன் நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கவில் படித்த பொறியியல் பேராசிரியரான முகமட் முர்சியின் இந்த அதிரடி இருபடிக் கொள்கை அறிவிப்பு புதிதாக தான் ஒரு அமெரிக்க கைக்கூலி அல்ல என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்.
எகிப்தியப் பொருளாதாரம்
அரபு நாட்டில் அதிக மக்கள் தொகையும் உன்னதமான உல்லாசப் பயணத்துறையையும் கொண்ட எகிப்தில் புரட்சிக்குப் பின்னர் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஏற்கனவே 30% மான இளைஞர்கள் வேலையின்றி இருந்த எகிப்தில் உல்ல்லாசப் பயணத்துறையும் வெளிநாட்டு முதலீடுகளும் புரட்சிக்குப் பின்னர் வீழ்ச்சியைக் கண்டன. தேர்தல் முடிவு ஒரு அரசியல் திடத் தன்மையை உறுதி செய்யும் என்பதால் பொருளாதாரம் சீரடையலாம். ஏற்கனவே அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைபு வசதிகள் அபிவிருத்தியடையாத குறை எகிப்தில் இருக்கிறது. புதிய அரசு தனது செலவீனங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பொது சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு போன்றவற்றிக்கு பெரும் செலவு செய்யப்பட வேண்டி இருக்கிறது. எகிப்திற்கு சவுதி அரேபியா நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அளிப்பதாக வாக்குறுதியளித்து அதில் ஒரு பில்லியனை ஏற்கனவே வழங்கிவிட்டது. மிகுதி மூன்று பில்லியன்களும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான கால அட்டவணை ஒன்றை சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை. எகிப்தில் ஏற்படும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு அமைய ஐக்கிய அமெரிக்கா கொடுக்கும் சமிக்ஞைகளுக்காக சவுதி அரேபியா காத்திருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
எகிப்தில் நடந்தது வலை தல புரட்சிய ?
வளை குட நாடுகளில் அரசு என்பது மேலை நாடுகளின் முகமுடி அரசுகள் தான்.
இராக்,, ஆப்காநிஷ்டன், இலங்கை இந்திய என பல நாடுகளை பார்த்தாலும் இது புரியும்.
மக்களின் உணர்ச்சிக்கு வடிகால் தர , முபாரக் முக முடிய கழட்டிவிட்டு வேறு முடி மாட்டி இருக்காங்க...
இன்னம் அந்த நாட்டுகளில் இருப்பது முகமுடி மேனாண்டு அரசுகள் தன்
இது தெரிஞ்சும் புரட்சி பேஸ் புக்கில நடந்தது ... வலையில நடந்தனு சொல்லி ..
பின்னல் இருக்கும் அமரிக்க முகத்தை மறச்சு ..
மேனாட்டுக்கு ஜிங்கு ஜ .. அமரிக்காவுக்கு ஜிங்கு ஜா .. அடிக்கிறீங்க ....
மேனாடிடம் கையுட்டு வங்கிய அமரிக்க கையாள் நிங்க ன்னு தெரிங்சு போச்சு
"வலை தல, புரட்சிய ?
வளை குட, முகமுடி, ஆப்காநிஷ்டன், இன்னம், மேனாண்டு
மேனாட்டுக்கு ஜிங்கு ஜ .. அமரிக்காவுக்கு ஜிங்கு ஜா .."
இவை தமிழ்ச் சொற்களா? விநோத் குமார் ஆரியர்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு தமிழைக் கொல்கிறார்.
Post a Comment