“Thailand’s Got Talent” என்னும் போட்டியில் கலந்து கொண்ட அழகி தொலைக்காட்சியில் தனது மேலாடையைக் கழற்றி தன் மார்பால் ஓவியத்திற்க்கு வர்ணம் தீட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 23 வயதான Duangjai Jansaunoi. காலணி இன்றி காற்சட்டையும் மேலாடையும் (jeans and a baggy men’s button-down shirt) அணிந்து மேடையேறிய Duangjai Jansaunoi சுவரில் ஒரு ஆளின் உருவத்தின் வெளிக் கோடுகளை கையால் வரைந்துவிட்டு தனது மேலாடையைக் கழற்றிவிட்டு தன் மார்பின் மேல் வர்ணங்களை ஊற்றினார். பின்னர் தன் மார்பை சுவரில் தேய்த்து அந்த வெளி உருவிற்கு வர்ணம் தீட்டினார். ஓவியம் ஒரு உருப்படியான ஓவியமல்ல. வர்ணமும் ஒழுங்கான வர்ணமும் அல்ல. ஆனால் தூரிகை சர்ச்சையைக் கிளப்பி விட்டது. நடுவர்களாக இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். இரு ஆண்களும் அவருக்கு வாக்களித்து அவரை அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்தனர். ஆனால் பெண் நடுவர் ஆத்திரமடைந்து காணப்பட்டார்.
தாய்லாந்தின் கலாச்சார அமைச்சர்(இவர் ஒரு பெண்) இத் தொலைக் காட்சித் தயாரிப்பாளர்களை தனது பணிமனைக்கு அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.
இளைஞர்களின் திறமைவெளிப்படுத்த தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு எல்லை உண்டு என்றார் தாய்லாந்தின் கலாச்சார அமைச்சர் Sukumol Kunplome.
ஏற்கனவே விக்டோரியா எனப்படும் இரசியப் பெண் தனது மார்பால் ஓவியங்களை வரைந்து புகழடைந்துள்ளார் இவரது ஓவியங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
Superb talent.. good collection.. Keep it up..
Post a Comment