Saturday 14 April 2012

பூகம்பத்தால் கூடாமல் போன கூடாங்குளம்

கூடாங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது எனச் சொல்லி வந்த அதிகாரிகள் சென்னையிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து காசிநாத் பாலாஜி தலைமையில் அணு மின் நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. பாதுகாப்பானது என்பதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?

 2004 வேறு 2012 வேறு
இந்தோனெசியாவில் 2004இல் ஏற்பட்ட பூமி அதிர்வு தமிழ்நாட்டில் உணரப்படவில்லை ஆனால் தமிழ்நாட்டை 24 மீட்டர் ஆழிப்பேரலை தாக்கியது. அதே இடத்தில் கிட்டத் தட்ட அதே அளவு நில அதிர்வு 2012இல் ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் அதிர்வு உணரப்பட்டது ஆனால் ஆழிப் பேரலை எங்கும் ஏற்படவில்லை. ஒரு மீட்டருக்கும் குறைவான அலை உருவானது. அது அந்தமான் தீவில் 35 செண்டி மீட்டராகக் குறைந்திருந்தது.

தகடுகளிடை அதிர்வும் தகட்டுள் அதிர்வும்
2004இல் நிகழ்ந்த அதிர்வு பூமித் தகடுகளிடை (inter plate) புறணிக் குமை பிராந்தியத்தில் (subduction zone) நிகழ்ந்த மேல் நோக்கிய அதிர்வு ( vertical movement). 2012இல் நிகழ்ந்த அதிர்வு இந்தியப் பூமித் தகட்டக்குள்(intra plate) நடந்தது ஒரு பக்கவாட்டு  (horizontal movement). சில ஆய்வாளர்கள் 2012இல் நடந்தது ஒரு புது விதமான அதிர்வாக இருக்கலாம். இதுபற்றிய ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அனர்த்தம் ஏற்படுத்தும் அனர்த்தம்
2004இல் ஏற்பட்ட அதிர்வு இந்தியப் பூமித் தகட்டின் மேற்பரப்பில் ஏறடுத்திய சிதைவுகளின் விளைவுதான் 2012இல் ஏற்பட்ட சிதைவு என்று சொல்லப்படுகின்றது. 2012இல் ஏற்பட்ட சிதைவு புதிதாக ஒரு பூமித் தகட்டை உருவாக்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.  2012இல் ஏற்பட்ட அதிர்வு தகட்டு மேற்பரப்பில் மேலும் தகர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். இவ்விரண்டும் கூடாங்குளத்திற்கு அண்மையில் பூமித் தகடுகளிடை (inter plate) அதிர்வு ஏற்படும் சாத்தியத்தையும் பூமித் தகட்டக்குள்(intra plate) அதிர்வு ஏற்படும் சாத்தியத்தையும் அதிகரித்துள்ளது.

எச்சரிக்கைக் கருவிகள்
2004 இல் ஏற்பட்ட ஆழிப் பேரலையைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆழிப் பேரலை எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டன. இவை 2012இல் சரியாக வேலை செய்து எச்சரிக்கையை விடுத்தன என்று சொல்லப்படுகிறது. இனி வரும் பூமி அதிர்வுக்கெல்லாம் ஆழிப் பேரலை எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தால் புலி வருகிறது என்ற கதையாகிப் போய்விடும். சாதாரணப் பூமி அதிர்வு வேறு ஆழிப் பேரலை கொண்டுவரும் பூமி அதிர்வு வேறு என்பதை 2012இல் நிகழ்ந்த பூமி அதிர்வு உணர்த்துகிறது. இவற்றைக் பாகுபடுத்தக் கூடிய கருவிகள் தேவை.

ஆழிப்பேரலையால் அழிந்த தமிழன்
தொன்று தொட்டே தமிழினத்திற்கு போராலும் சாவு நீராலும் சாவு. கூடாங்குளம் ஈழத்திற்கு அண்மையில் இருக்கிறது. மைலாப்பூரிலும் பார்க்க ஈழத்திற்கு அண்மையில் இருக்கிறது. கூடாங்குளம் பாதுகாப்பானது என்றல் புது டில்லியில் இந்தியப் பாராளமன்றத்திற்கும் தென்மண்டல அதிகார மையத்திற்கும் நடுவில் ஒரு அணு மின் உலையை அமைக்கலாம். அணு உலை வெடிப்பால் ஒரு அழிவு தமிழனுக்கு வேண்டாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...