Sunday 15 April 2012

வட கொரியாவின் ஏவுகணை ஏன் புஷ்வாணம் ஆகியது? - காணொளியுடன்


Rocket science என்னும் சொற்தொடர் ஆங்கிலத்தில் அடிக்கடி பலராலும் பாவிக்கப்படுகிறது. அதிக புத்திசாலித்தனம் நுட்பமான முயற்சி கடும் உழைப்பு ஆகியவை தேவைப்படும் செய்கைகளை rocket science என்று கூறுவர். வட கொரியா கண்டம் கண்டம் விட்டுப் பாயக் கூடிய ஏவுகணையை விண் வெளிக்குச் செலுத்தப் போகின்றன என்றவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகளில் பெரும் அதிர்ச்சிகளும் ஆட்சேபங்களும் தெரிவிக்கப்பட்டன. வட கொரியாவின் ஏவுகணை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு விரோதமானது என்ற குற்றச் சாட்டும்  முன் வைக்கப்பட்டது.

விண்வெளிக்கு ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு எளிதில் தீங்கு விளைக்கும் நிலையை அடையக்கூடிய இரசாயனப் பதார்த்தங்களை கடும் அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிக்கும் மத்தியில் கையாளும் திறன் தேவைபடும். மிக மிகச் சிறிய தவறும் விபரீதத்தில் முடியும். இதில் ஈடுபடும் காய்ச்சி இணைக்கும்(welding) தொழிலாளர்கள் கூட மிக நுட்பமாகாச் செயற்படவேண்டும்.

இதுவரை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, உக்ரேய்ன். பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஈரான், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விண்வெளிக்கு ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளன.  ஈராக், பிரேசில் வட கொரியா ஆகிய நாடுகள் தோல்வியடைந்துள்ளன. ஏவுகணைத் தொழில்நுட்பம் முதலில் சீனாவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. 1429இல் பிரெஞ்சுப் படையினர் ஏவுகணைகளைப் பயன்படுத்தினர். 1782இல் இந்தியாமீது படை எடுத்த பிரித்தானியத் துருப்புக்கள் மீது முனையில் இரும்புக் குண்டுகளைக் கொண்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் பிரித்தானியர் அவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். முதலாம் உலகப் போரில் பிரித்தானியப் படைகள்
ballistic missiles என்னும் ஏவுகணைகளை ஜேர்மனிய விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்தின. தொடர்ந்து ஜேர்மனியரும் ஏவுகணைகளை உருவாக்கினர். 1926இல் திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்க உருவாக்கியது. தொடர்ந்து சோவியத் ஒன்றியம் பெரிய ஏவுகணைகளை உருவாக்கியது. அதனால் அவர்களால் விண்வெளிக்கு செய்மதியை முதலில் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கொடுத்தது. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையாகும்.

1988இல் இருந்து வட கொரியாவின் நான்கு ஏவுகணைப் பரிசோதனைகள் படு தோல்வியில் முடிவடைந்துள்ளன. சிலர் இவை பரிசோதனைகள் அல்ல பிராந்திய ஆதிக்க ஆர்வக் கோளாறே என்றும் சொல்கின்றனர். வட கொரியா ஏற்கனவே இரு அணுக் குண்டு வெடிப்புப் பரிசோதனைகளை முடித்துவிட்டது. மூன்றாவதற்குத் தயாராகின்றது.
உன்ஹா - 3 எனும் மூன்று தட்டுச் செயற்கை கோளை வட பியோங்யன் மாநிலத்தின் சோல்சான் மாவட்டத்தில் உள்ள தொங்சாங்ரியில் அமைந்துள்ள மேற்கு கடல் செயற்கை கோள் ஏவு மையத்தில் இருந்து வட கொரியா ஏவியது. அது 90 நொடிகளில் இருபது துண்டுகளாகச் சிதறி மஞ்சள் கடலில் விழுந்தது. வட கொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சுங்கின் 100வது பிறந்த நாளில் ஏவுகணை ஏவப்பட்டது.
இதன் காணொளி:


வட கொரியாவின் தோல்வியைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது.
“Not only are they short on money, but also expertise. Developing this technology requires expertise across a range of fields, from fluid dynamics to metallurgy to materials science to flight dynamics,” says Brian Weeden, a former officer with the U.S. Air Force Space Command. “Countries that have been successful in this area all have extensive science, technology, engineering and mathematics programs to develop people with expertise in those fields.

மேலும் வடகொரியா பல தட்டுக்கள் கொண்ட ஏவுகணைத் தாயாரிப்பில் வெற்றி காணவில்லை. விண்வெளிக்கு ஏவுகணை செலுத்தி செய்மதியை மிதக்க விடவும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் பல்தட்டு ஏவுகணைத் தொழில் நுட்பம் முக்கியமானதாகும்.

பல்தட்டு ஏவுகணை. இப்பல்தட்டு தொழில்நுட்பத்தில் வட கொரியா கோட்டை விட்டது


வட கொரியாவின் ஏவுகணைச் செலுத்தலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூடி வட கொரியவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானித்தது. ஐக்கிய அமெரிக்கா தான் வட கொரியாவின் ஏழைகளுக்கு அனுப்ப இருந்த 240,000 தொன்கள் உணவை இரத்துச் செய்து விட்டது. ஏவுகணைச் செலுத்தல் தோல்வி வட கொரிய ஆட்சியாளர்கள் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...