Friday, 13 April 2012
ஒவ்வொரு நாளும் தமிழனுக்குப் புத்தாண்டாகும்
கால நதியின் வட்டத் தொடரோட்டத்தில்
அசைந்து செல்லும் ஒரு சிறு புள்ளி
அதைப் புத்தாண்டென்பர்
இன்று ஒன்றும் இங்கு முடியவில்லை
நாளை ஒன்றும் புதிதாகத் தொடங்கப் போவதுமில்லை
புத்தாண்டு எனப் புதிதாக ஒன்றும் இல்லைவேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்
கூச்சலிடும் குள்ள நரி அரசியல் கூட்டம்
நேற்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
தமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்
தமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்
இன்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
மேடம் முதல் மீனம் வரை தொடரும் வட்டதில்
தொடக்கமும் இல்லை முடிவுமில்லை
இதில் பழையது எது? புதியது ஏது?
குருவாய் இருக்க வேண்டிய இந்தியா
சிங்களத்தின் எருவாய் கழுவும் கலியாய் மாறியதால்
ஒன்பதாதிபனும் பதினோராதிபனும்
ஒன்றாய் கூடி இரட்டைக் கோபுரம் தகர்த்ததால்
ஆடிக் கூடி நின்ற பன்னாட்டுச் சமூகம்
பாதகன் வீட்டில் நீசனாகியதால்
தென் துருவத்துக் கடகத்தில் 2009இல்
திசைமாறிப் போனது எங்கள் ஞாயிற்று ஒளி
இரண்டாயிரத்துப் பதின்நான்கில் இந்தியாவில்
இத்தாலிச் சனியனின் மாற்றம் நிகழ
மனித உரிமைக்கழகப் புதன்
ஐநாவிற்கு சரியாகப் பெயர்ச்சியுற
பான் கீ மூன் தேயும் மூன் ஆக
நீசர்கள் இடம் மாற நிலைமைகள் சரியாக
தமிழர்க்குத் தொடங்கும் சுக்கிர திசை
ஆண்டாண்டாய் முடிவின்றித்
தொடரும் தமிழன் ஆட்சி
தை என்ன சித்திரை என்ன
ஒவ்வொரு நாளும்
தமிழனுக்குப் புத்தாண்டாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment