நேர்மையான அரசியல்வாதி, துணிச்சாலான அரசியல்வாதி, குடும்பச் செல்வாக்கை முன்வைத்து அரசியலுக்கு வராத அரசியல்வாதி இப்படிப் பல பாரராட்டுதல்களைப் பெற்றவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பனர்ஜீ. இவர் பெயர் இப்போது இந்தியத் தேசிய அரசியலில் பெரிதாக அடிபடுகிறது. குடும்பப் பிடிக்குள் அகப்பட்ட காங்கிரசுக் கட்சியும் மதவாதக் கட்சியான பாரத் ஜனதாக் கட்சியும் மட்டும்தான் இந்தியாவை ஆளவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலாக மூன்றாம் அணி என்பது பதிலாகும் போது மாநிலத் தலைவர்களான மம்தா பனர்ஜீ, ஜெயலலிதா, போன்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். தனது கட்சியைச் சேர்ந்த இந்திய தொடரூந்துத் துறை அமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் பயணக் கட்டங்கள் அதிகரித்தமைக்காக அவரைப் பதவியில் இருந்து விலகச் செய்ததால் அவர் பெயர் உலகெங்கும் அடிபட்டது.
கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்க்கும் போதே காங்கிரசுக் கட்சியில் இணைந்து அதன் இளைஞரணித் தலைவியாகி குறுகிய காலத்தில் புகழ்பெற்றார் மம்தா. இன்றுவரை திருமணமாகவில்லை. அவர் எந்த அழகு சாதனமும் பவிப்பதில்ல்லை. நகைகள் அணிவதில்லை. 96இலட்சம் ரூபாக்கள் பெறுமதியுள்ள நகைகள் அவரிடம் இருக்கின்றன. ஒரு நீலக்கரையுடனான அல்லது பச்சைக் கரையுடனான வெள்ளை நூற்ச் சேலையை விரும்பி அணிவார். ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றபோது தனது மருமளுக்கு உதட்டுச் சாயம் வாங்கச் சென்ற இவர் பெண்களின் உதட்டுச் சாயம் என நினைத்து ஆண்களின் அழகு சாதனத்தை வாங்கினார். கலாநிதிப்பட்டம் பெற்றவர். நிறையப் படித்தவரான மம்தா பனர்ஜீ அனுபவப் பாடசாலையில் நிறைய அரசியல் கற்றவர். சரித்திரம், சட்டம், கல்வியியல் துறைகளில் பட்டம் பெற்றவர். அரசியலில் மிகச் சிறந்த எதிர்ப்பாளராகச் செயற்படக்கூடியவர் மம்தா. அதில் புகழ் பெற்றவர். எதிர்க்க ஒன்றும் இல்லாவிடில் எதிர்ப்பதற்கு எதையாவது உருவாக்கக் கூடியவர்.
சண்டிராணி மம்தா
1984-ம் ஆண்டு 29வயதான மம்தா பனர்ஜீ பிரபல பொதுவுடமைவாதியான சோமநாத் சட்டர்ஜீயைத் தோற்கடித்து இந்தியப் பாரளமன்றத்திற்குத் தெரிவானார். 1991இல் நரசிம்மராவ் அரசில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சரானார். அமைச்சராக இருந்து கொண்டே அரசு விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவில்லை என்று எதிர்ப்புக் காட்டினார். 1996இல் மகளி இட ஒதுக்கீட்டை எதிர்த்த ஒரு பாராளமன்ற உறுப்பினரை பாராளமன்ற வளாகத்தில் இருந்து சட்டையில் பிடித்து இழுத்து வெளியேற்றினார். 2006இல் பங்களாதேசத்தில் இருந்து வரும் கள்ளக் குடியேற்றக்காரர்காள் தொடர்பான தனது பிரேணனையை விவாதத்திற்கு எடுக்காத பாராளமன்ற சபாநாயகர்மீது தனது பதவி விலகல் கடிதத்தை வீசினார்.
சொந்த அரசியல் கட்சி
1997இல் காங்கிரசுக் கட்சியில் இருந்து வெளியேறி திரினமூல் காங்கிரசுக் கட்சியை ஆரம்பித்தார். 1999இல் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2000இல் தொடரூந்துத்துறை அமைச்சராகி திறம்படச் செயற்பட்டார். 2001இல் ஆயுத பேர ஊழல் அம்பலமானததைத் தொடர்ந்து ஊழல் புரிந்த அரசை எதிர்த்து அமைச்சர் பதவியைத் துறந்தார். மீண்டும் 2004இல் நிலக்கரித்துறை அமைச்சரானார். இவரை ஊழல் அற்றவர் என்றும் எளிமையாவர் என்றும் இவரது ஆதரவாளர்கள் கூறிய போதும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த இவரிடம் 52கோடி பெறுமதியான சொத்து உண்டு. இவரை இவரது ஆதரவாளர்கள் அக்கா என்றே அழைக்கின்றனர்.
தூக்கிவிட்ட நந்திக்கிராம எதிர்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பொதுவுடமைவாதிகளின் அரசு விவசாயிகளின் நிலங்களை இந்தோனிசிய நிறுவனத்தின் முதலீட்டிற்காக பறித்தபோது அதை மம்தா கடுமையாக எதிர்த்தார். நில அபகரிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபோது மாநில அரசு அவர்கள்மீது கட்சித் தொண்டர்களையும் காவல்துறையினரையும் ஏவிவிட்டது. பெரும் கலவரம் நிகழ்ந்தது. இது மம்தாவின் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது. 2009இல் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் மம்தா பனர்ஜீ காங்கிர்சுடன் கூட்டணை அமைத்து அமோக வெற்றியீட்டினார். மீண்டும் தொடரூந்துத் துறை அமைச்சரானார். 2011இல் மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மம்தாவின் திரினமூல் காங்கிரசுக் கட்சி பெரும் வெற்றி ஈட்டியது. உலகத்திலேயே அதிககாலம் தேர்தலில் மூலம் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருந்த பொதுவுடமைக்கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. மம்தா மேற்கு வங்க மாநில முதலமைச்சரானார். விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசில் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த திரிவேதி தொடரூந்துத் துறை அமைச்சரானார். மாநில முதல்வரான மம்தா மாநிலத்தில் வாழும் கூர்க்காக்களின் பிரச்சனையைத் தீர்க்க அவர்களுடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். மாவோயிஸ்டுக்கள் வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்தார்.
பிரணாப் முகர்ஜீ சித்தார்த்த சங்கரே போன்ற காங்கிரசுக் கட்சியினர் மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்ததால் மாநில அரசியலில் அதிக அக்கறை காட்டாமல் மத்திய அரசில் அதிக அக்கறை எடுத்து அமைச்சர்களானார்கள். மம்தா இரு முனைகளிலும் தனது அக்கறையையும் திறமையையும் காட்டுகிறார். கொல்கத்தாவில் இருந்து கொண்டு புது டில்லியை ஆளுகிறார் என்று இவரை விமர்சிக்கிறார்கள். இவரது மருமகன் அண்மையில் காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார். இது அவரது நேர்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு கற்பழிப்பின் குற்றவாளிகளைக் கண்டு பிடித்த காவல்துறை அதிகாரிகளுடன் மம்தா நடந்து கொண்டவிதம் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது.
காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணியாக இருந்து கொண்டே காங்கிரசின் ஆட்சியை பல வழிகளில் எதிர்த்து வருகிறார் மம்தா பனர்ஜீ. தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பயங்கரவாத எதிர்ப்புச் சபையை மத்திய அரசு அமைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் மம்தா. அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு, தேசிய உணவுப் பாதுகாப்ப்பு மசோதா போன்றவற்றை எதிர்க்கிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரசைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கு வங்கத்தில் வெற்றிடமாகும் 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு மமதா பானர்ஜி அதிர்ச்சியளித்துள்ளார். மம்தா தந்து அரசியல் செல்வாக்கை மேற்கு வங்கத்தையும் தாண்டி அகலப்படுத்த முனைகிறார். அதற்காகத்தான் இந்தனை அரச எதிர்ப்பு நிலைப்பாடு என்று சொல்பவர்களும் உண்டு.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக் கட்சி மாநில சட்ட சபைத்தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தமை காங்கிரசுக் கட்சிக்கு அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. இதில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரசுக் கட்சி முக்கிய இடம் பெறுகிறது. உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியின் பகுஜன் கட்சியும் படுதோல்வியடைந்தது. பாரதிய ஜனதாக் கட்சியும் தோல்விகண்டது. இது மூன்றாம் அணி ஒன்றிற்கான அவசியத்தை உருவாக்கியுள்ளது. ஊழலுக்குப் பெயர் பெற்ற காங்கிரசுடன் செல்வாக்கு மிக்க பங்காளியாக மம்தா இணைவாரா? அல்லது இந்திய அரசியலில் மூன்றாம் அணியில் முன்னணித் தலைவராகத் திகழ்வாரா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment