இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் "இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றும் போது இலங்கை போருக்குப் பின்னர் போதிய அளவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சமாதானத்தை இழப்பார்கள் என்றார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணத்தை விளக்குகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் இந்தியா கூட்டணி அரசின் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் இந்தியாவின் வாக்கு ஒரு பெறுமதி அடிப்படையிலான கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்ட வாக்கு என்றார்.
இலங்கையில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் "அதற்குக் காலம்தான் பதில் கூறும்" என்றார்.
இதற்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கேந்திரோபாய விவகாரத் துறைத் தலைவர் கோபால்ஜீ மாளவையா "இலங்கை சீனாவை நெருங்கி வருகிறது. இலங்கை இந்தியாவில் இருந்து விலகி சீனாவை நெருங்கிச் செல்வதை இந்தியா அனுமதிப்பதா இல்லையா என்பது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஏற்கனவே நாம் நேப்பாளத்தை இழந்து விட்டோம். மேற்கு வங்க முதல்வரின் பேச்சுக்களால் பங்களாதேசம் கொதிநிலை அடைந்துள்ளது." என்றார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் அவர்களின் உரை இந்தியாவின் இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கு அடிக்கல் நாட்டுகிறது என்று கூறலாம். உண்மையில் இலங்கையில் சீனாவுடனான போட்டியில் இந்தியா தோற்று விட்டது என்பதுதான் உண்மை. சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வந்தது. விளைவு தமிழர்களின் ஆயுத போராட்டம் வலுவிளந்தது. தமிழர் போராட்டம் வலுவிழந்த பின்னர் இலங்கை மீதான பிடியை இந்தியா இழந்து விட்டது. மஹிந்த ராஜபக்ச தனது மந்திரி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது நண்பர்களுடன் உரையாடுகையில் இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை தான் எப்படி ஏமாற்றினார் என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டார். இலங்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்த அளவு பலவீனமாக இருந்தது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனனின் உரைக்கு ரைம்ஸ் ஒவ் இந்தியாவில் பின்னூட்ட மிட்ட ஒருவர் கூறியது:
India is loosing Lanka not because of supporting human rights motion, but because is wicked politics, crooked behavior,dishonesty, lack of principles, lack of vision, lack of good faith, double face, twisted tongue and every bad behavior one can attribute. India is in the hands of elitist Mafia.
இந்தியா இலங்கையை இழப்பது மனித உரிமைத் தீர்மாந்த்திற்கு ஆதரவு வழங்கியதற்காகவல்ல, இந்தியாவின் கொடூரமான அரசியல், குறுக்கு பண்புகள், நேர்மையின்மை, கொள்கைகள் போதாமை, தூர நோக்கின்மை, நன்நம்பிக்கையின்மை, இரட்டை முகம், இரட்டை நாக்கு, போன்ற பல துர் குணங்களே காரணம். இந்தியா தம்மை மேலானவர்கள் என்ற கொள்கையுடைய மாஃபியாவின் கையில் உள்ளது.
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனனின் கூற்று இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கு அடிக்கல் நட்டுவிட்டது என்று கூறலாம். இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் ஒரு அம்சமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரசு மஹிந்த ராஜபக்ச அரசில் இருந்து வெளியேறுகிறது. அந்த மாற்றம் தமிழர்களுக்கு சாதகமாக மாறுமா என்பது தான் கேள்வி.
பூநூல்களும் மல்லு அங்கிள்களும்
புது டில்லி அதிகார மையத்துள் சீனக் கைக்கூலிகள் ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே செயற்படுகின்றனர். அவர்களின் மனுதர்மப் படி சூத்திரனான தமிழர்கள் ஆளக்கூடாது. அவன் ஆளப்பட வேண்டியவன். அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலனைக் கோட்டை விட்டு தமது சாதிய நலன்களை முன்னிறுத்தியதன் விளைவுதான் இலங்கையில் சீனாவின் ஆழ-அகலக் காலூன்றல். இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளான மியன்மார், பங்களாதேசம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் சீனா திட்டமிட்ட முறையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துவிட்டது. அண்மையில் துக்ளக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தும் ராஜ்பக்சவிற்கு வக்காலத்து வாங்கியும் சோ எழுதியது எமக்கு சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறது. எத்தனை சனல்-4 காணொளிகள் வந்தாலும் முழு உலகும் தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களின் உண்மையை உணர்ந்தாலும் இந்தப் பூநூல்களும் மல்லு அங்கிள்களும் என்றும் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதில் பஞ்ச கஜத்தை வரிந்து கட்டிக் கொண்டுதான் நிற்பார்கள். இவர்களின் ஆதிக்கம் புது டில்லியின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் வரை இந்தியாவின் கொள்கை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கும் அளவிற்கு மாறாது.
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றம் தமிழர்களைப் பொறுத்த வரை காலம் கடந்துவிட்டது. இந்தியாவின் கொள்கை மாறினாலும் அது இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை நாடியதாகவே இருக்குமே தவிர தமிழர்கள் நலன் சார்ந்ததாக இருக்காது. அமெரிக்காவின் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. அமெரிக்கா சிங்களவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் இருக்க நினைக்கிறது. 1980களில் தமிழர்களின் முதுகில் ஏறி இந்தியா இலங்கையை கட்டுக்குள் கொண்டுவந்தது போல் இப்போது அமெரிக்கா செய்ய நினைக்கிறது. உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கான கடற்போக்கு வரத்து அமைந்துள்ள இந்து சமூத்திரத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் இலங்கையில் வல்லரசு நாடுகளிற்கு இடையின போட்டி சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ நன்மையாக அமையாது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment