ஜெனீவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாசகங்கள் தொடர்பாக கடைசிவரை இழுபறியாகவே இருந்தது. தீர்மானத்தின் வாசகங்களைக் கடுமையாக்க வேண்டும் என நோர்வே உடபடச் சில ஐரோப்பிய நாடுகள் கருதின. வாசகங்கள் கடுமையானால் பரவலான ஆதரவு கிடைப்பது கடினம் என்று அமெரிக்கா கருதியது. இந்தியா உடபட வாக்களிக்கும் உரிமை கொண்ட பல நாடுகள் எந்த நாட்டுக்கு எதிராக எந்த தீர்மானம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்ற கொள்கை தம்மிடம் இருப்பதாக பகிரங்காமாக அறிவித்திருந்தன. வேறு சில நாடுகள் அமெரிக்கா எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்க்கும் கொள்கை கொண்டவை. அவற்றில் சில இலங்கையுடன் நெருங்கியா உறவு கொண்டவை.
தீர்மான வாசகம் தொடர்பாக அமெரிக்கா இந்தியாவுடன் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இதனால் தீர்மான வாசகங்களில் பல மாற்றங்கள் சிங்களவர்களுக்குச் சாதகமாக இந்தியாவைத் திருப்திப்படுத்த மாற்றப்பட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கா தனது தீர்மானம் நிறைவேற்றுப்பட தனது பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தியது. தேவை ஏற்பட்டால் வெள்ளை மாளிகையில் இருந்து பராக் ஒபாமாவே நேரடியாக மற்ற அரச தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவு தேடத் தயாரான நிலையில் இருந்தார். ஆனால் ஹிலரி கிளிண்டன் களமிறங்கி தீர்மானம் நிறைவேறத் தேவையான வாக்குகளை பெறுவதை உறுதி செய்து கொண்டார்.
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய நிலைப்பாட்டை ஆரம்பத்தில் இந்தியா வெளியில் தெரிவிக்காமல் இருந்தது. தனது நாட்டில் தமிழர்கள் தான் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தால் எப்படி அதை எதிர்ப்பார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்க்க இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ மூலமாக இந்தியா இலங்கைக்கு சாதகமான நிலைப்பட்டை எடுத்து தீர்மானத்தை எதிர்க்கும் என்ற கருத்தை வெளிவிட்டது. அப்படி இந்தியா வாக்களித்தால் தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் உணர்ந்து இருந்தனர். அவர்களின் எதிர்ப்புக் கடுமையாக இருந்தது. சிங்களவர்களுக்கு வால்பிடிப்பவர்களில் முக்கியமான சுதர்சன நாச்சியப்பனே எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஞானதேசிகனை சேலை அணிந்த முசோலினி தொலைபேசியில் மிரட்டியும் அவர் பணியவில்லை. வேண்டுமானால் என்னைப் பதவியில் இருந்து நீக்குங்கள் என்றார் ஞானதேசிகன்.
சந்திவிக்கிரகம் என்னும் பகைவரை அடுத்துக் கெடுத்தல்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அறிந்தவுடன் பஞ்சதந்திரத்தில் ஒன்றான சந்திவிகிரகம் என்னும் அடுத்துக் கெடுத்தலை இந்தியா கையில் எடுத்தது. அமெரிக்காவின் நண்பனாக இணைந்து தமிழர்களைக் கெடுக்கவும் சிங்களவர்களுக்கு கொடுக்கவும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென அமெரிக்காவின் தீர்மானத்தை இட்னியா ஆதரிக்கும் என்று அறிக்கைவிட்டார். 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தி இலங்கையை கண்டிக்க கொண்டுவரப் பட்ட தீர்மானத்தை கடுப் பிரயத்தனம் செய்து இலங்கையைப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக்கி தனது தமிழின விரோதச் செயலை அம்பலப்படுத்திய இந்தியா 2012இல் தனது நயவஞ்சகத்தை வெறுவிதைமாக வெளிக் கொண்டுவந்தது. அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தீர்மான வாசகத்தில் கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்தை ஒன்றரை வருடமாக்கியது. இப்படிப் பல வாசகங்கள் இந்தியாவால் மாற்றப்பட்டன. இந்தியா தனது அடுத்துக் கெடுக்கும் செயலை இப்படி வெளிவிட்டது:
“India believes that the primary responsibility for the promotion and protection of human rights lies with the states. Consequently, resolutions of this nature should fully respect the sovereign rights of states and contribute to Sri Lanka’s own efforts in this regard,” the Indian foreign ministry said in a release.
“While we subscribe to the broader message of this resolution and the objectives it promotes, we also underline that any assistance from the office of the high commissioner on human rights...should be in consultation with and with the concurrence of the Sri Lankan government,” the ministry said, making it clear that India was against the sovereignty of Sri Lanka being violated, according to people familiar with the developments.
“These are norms which all of us in the council subscribe to. A democratic country like Sri Lanka has to be provided time and space to achieve the objectives of reconciliation and peace. In this council, we have the responsibility to ensure that our conclusions do contribute to this objective rather than hinder it,” the Indian statement added.
ஐநா மனித உரிமைக்கழகத்திற்கான இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தாம் இலங்கையி இறைமையைப் பாதுகாத்ததாக அறிவித்துள்ளார்.
ஜெனீவாத் தீர்மானத்திற்காக இந்தியா செய்த திரைமறைவுச் சதிகளை அறியாத பல சிங்களவர்கள் இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை வெளிவிடத் தொடங்கிவிட்டனர்.
இலங்கையில் இருந்து ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமான வாசகங்களை தணித்தமைக்காக இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment