Thursday 15 March 2012

சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல.

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கொடூரமான காட்சிகள் நிறைந்த நிகழ்ச்சி என்பதால் இது இரவு 10.55இல் ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் காண்பிக்கப்படலாம் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். பல வதந்திகளும் அடிபட்டன.

சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi, சட்டத்துறைப் பேராசிரியர் WILLIAM SCHABAS, Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee), முன்னாள் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட், 2010 வரை ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான பிரதிச் செயலர்  David Holmes ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெளிநாடுகளினதும் ஐக்கிய நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கை அரசாங்கம் அறிவித்த சமாதான வலயத்துக்குள் தொடர்ந்து கனரக எறிகணைகள் வீசப்பட்டதை சனல் 4 ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது. தற்காலிக மருத்துவ மனைகள் மீது எறிகணைகள் வீசப்பட்டதையும் சனல் 4 சுட்டிக்காட்டியது. போர் நடந்த இடத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் விடுத்த மருந்துகளுக்கான வேண்டுகோள்களை இலங்கை அரசு வேண்டுமென்றே தட்டிக் கழித்ததையும் சனல் 4 அம்பலப்படுத்தியது. போர்முனையில் அகப்பட்டிருக்கும் மக்கள் தொகையை இலங்கை அரசு வேண்டுமென்றே  குறைத்துக் கூறியதையும் அதிலும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச போர் முனையில் ஒரு ஐயாயிரம் அல்லது ஆகக் கூடியது பத்தாயிரம் பேர்தான் அகப்பட்டுள்ளனர் என்று கூறியதையும் சனல் 4 காணொளி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது. பின்னர் உண்மையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்றும் சனல் 4 கூறியது. 


டேவிட் மில்லிபாண்ட் அறுபது தொன் உணவு மட்டுமே அனுப்பப்பட்டது என்றும் அவை முப்பதினாயிரம் மக்களுக்கு ஒரு சில தினங்கள் மட்டுமே போதும் என்றும் ஆனால் மூன்று இலட்சத்திற்கு மேல்பட்ட மக்களுக்கு 25 நாட்களுக்கு மேல் அறுபது தொன் உணவு மட்டுமே வழ்ங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மக்களுக்கு உணவு மறுத்து மருந்து மறுத்து வைத்திருங்தமை போர்க்குற்றம் என்றார் இதில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi, 
மேலும் டேவிட் மில்லிபாண்ட் இலங்கை ஆட்சியாளர்கள் பொய்யர்கள் என்றும் கூறினார்.
  போரின்போது இலங்கை அரசு கனரகப் படைக் கலன்கள் எதுவும் பாவிக்கப்படவில்லை என இலங்கைப் படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றும் சனல் 4 சொல்லியது.

இலங்கை அரசு சனல் 4 இன் முந்தைய காணொளிகளை பொய்யானது என்று இலங்கை அரசு கூறியது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவினர் சனல் 4 இன் காணொளிகளை ஆய்வு செய்தனர் ஆனால் அவை சனல் 4 இன் காணொளிகள் நம்பகத்தன்மை பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை சனல் 4 அம்பலப்படுத்தியது.

பாலச்சந்திரன் பிரபாகரன்
தனது ஐந்து மெய்ப்பாது காவலருடன் படையின கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் அவர் கண்முன்னே அவரது மெய்ப்பாது காவலர்கள் கொல்லப்படுவதைப் பார்த்தார் என்கிறது சனல் 4. பின்னர் பாலச்சந்திரன் அவரது கைக்கு எட்டிய தூரத்தில் நின்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee) அவர்கள் உறுதி செய்தார். 

பிரபாகரனின் உடல்
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் அடங்கிய புகைப்படங்களும் காணொளிப்பதிவுகளும் காட்டப்பட்டன. அவை யாவும் ஏற்கனவே இலங்கை அரச ஊடகங்களில் வெளிவந்தவையே. பிரபாகரன் ஒரு சண்டையில் கொல்லப்படவில்லை. பலமிக்க சுடுகலனால் மிக அண்மையில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டார் என சனல் 4 முடிபு கூறுகிறது.
இந்தப்படத்தில் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்


இந்த உடலின் நிறம் மற்ற உடல்களுடன் பார்க்கையில் வித்தியாசமானது

இது சவரம் செய்யப்படாத உடல்

இது சவரம் செய்த முகத்துடன் இருக்கும் உடல்

2004இல் அப்படி இருந்தவர் 2009இல் எப்படி இப்படி ஆனார்?

இலங்கை அரசு இதுவரை வெளியிட்ட எந்தப் படமும் பிரபாகரனின் உண்மையான உடலை ஒத்திருக்க வில்லை. பிரபாகரனின் முக்கிய அடையாளங்கள் அவரது நடுவில் பிளவுபட்ட நாடி, இரட்டை நாடி, மேல் பகுதி அகன்று வெளித்தள்ளி நிற்கும் காதுகள். இவற்றை வைத்துப் பார்க்கும் போது இதுவரை வெளிவந்த பிரபாகரனின் இறந்த உடல் என்று சொல்லப்படும் எந்தப் படமும் அவரது உண்மையான தோற்றத்தை ஒத்திருக்கவில்லை. சனல் 4 இன் பிரபாகரனின் இறந்த உடலின் படம் என்று பிரித்தானிய டெய்லி மெயில் ஒரு படத்தை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.


சனல் 4 இன் புதிய ஒளிபரப்பு தமிழின விரோதிகளுக்கு இரண்டு ஏமாற்றங்களைக் கொடுத்துள்ளன. 1. மேலும் போர்க்குற்றம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. 2. பிரபாகரன் இறந்தமைக்கான புதிய ஆதாரம் எதையும் சனல் 4 வெளிவிடவில்லை.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பான சர்ச்சைகள் தொடரும்.


2009இல் இலங்கையில் போர் முடிந்த பின்னர் சில இந்தியப்ப் பார்ப்பன ஆய்வாளர்கள் இனி தமிழர்களின் நிலை பிச்சைக்கார நிலைதான் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று எழுதினர். அவர்களுக்கு போர்க்குற்றம் என்ற ஒரு பிடியைக் கொடுத்தது சனல் 4. அந்தப் பிடியை வைத்துக் கொண்டுதான் தமிழ்ர்கள் தங்கள் அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறார்கள். அதற்கு தமிழர்களுக்கு உதவி செய்த சனல் 4 இற்கு நன்றிகள்.

8 comments:

Anonymous said...

savatam seitha udalum savatam seiyappadaatha udalum tua bag lathaan kidakku paarthinkalaa ?

HOTLINKSIN.COM திரட்டி said...

உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

Anand said...

நல்ல அலசல்.

Anonymous said...

Miha varutham. thalaivar uyirudan irukum naal veliyil varum. aanal authour "parparnar" endru kuripiduvathu migavaum varuthamaga ullathu.

Anonymous said...

சேனல்-4 கூறிய மற்ற எல்லாம் உண்மை. பிரபாகரன் பற்றி சென்னது மட்டும் பொய். அட்டகாசமான ஆய்வு.

பொய் சொன்ன சேனல்-4 துரோகி! அடிவருடி!!சிங்களவனின் எலும்புத்துண்டை நக்கும் நாய்.

சேனல்-4ன் முகத்திரையை கிழித்த அண்ணா.. நிங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு புதையல். தொடரட்டும் உங்கள் பனி

ARMATHI said...

நல்ல அலசல்.

Anonymous said...

salute the Channel-4 for good job u done for the tamils.tamils indebted to you.tamils in srilanka remain silent and protest against the west bcoz they are forced to do that.west sould not underestimate them,realise their harrasement now.still govt continue it revenge on tamils. keep up ur good work until we get the justice..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...