என்.டி.ரீ.வி தொலைக்காட்சிச் சேவை சுவிஸ் நகர் ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா எப்படிப்பட்ட நிலை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. பலரும் ஒரே நேரத்தில் உரையாடியதால் அது ஒரு உண்மையான "கலந்துரையாடல்" ஆகத்தான் இருந்தது. இந்தியப் பிரதமர் பணிமனைத் துணை அமைச்சர் நாராயணசாமி, மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத்ரத்னா என்ற பட்டம் கொடுக்க வேண்டும் என்று பரப்புரை செய்யும் பார்ப்பனர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் டி. ராஜா, பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி, பார்ப்பனர் பார்த்தசாரதி மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பன்னிரண்டு வயதான பாலச்சந்திரன் பிரபாகரன் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டதை மையப்படுத்திக் கலந்துரையாடல் ஆரம்பமானது. இப்பின்னணியில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன என காங்கிரஸ் கதர் வேட்டி அமைச்சர் நாராயணசாமியிடம் வினவப்பட்டது. கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் அதனால் தன்னால் அதுபற்றி கருத்துத் தெரிவிக்கக் முடியாது எனவும் நாராயணசாமி கூறினார். இந்த ஆண்டின் ஆரமப்பகுதியில் இருந்தே வாஷிங்டனிலும் டில்லியிலும் ஐக்கிய அமெரிக்காவினது இந்தியாவினதும் அதிகாரிகள் மனித உரிமைக் கழக கூட்டத் தொடரில் கொண்டு வரப் படவிருக்கும் தீர்மானம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. சென்ற வாரத்திலும் அமெரிக்க அதிகாரிகள் டில்லி சென்று கலந்துரையாடல்கள் நடாத்தினர். தீர்மானம் கொண்டு வருவதை ஒத்தி வைக்க இந்தியத் தரப்பில் பகீரதப் பிரயத்தனம் இலங்கையின் கட்டளைக்கு அமைய இந்தியா மேற் கொண்டது. தீர்மானத்தை ஐக்கிய அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு மட்டுப் படுத்தியது இந்தியாவின் சம்மதம் பெறவே. அல்லாவிடின் தீர்மான முன்மொழிவு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை ஒட்டியதாக அமைந்திருக்கும். இப்படி இருக்கையில் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என கதர் வேட்டி அமைச்சர் நராயணசாமி பெரும் பொய்யை அவிழ்த்து விட்டார். தமிழ்நாட்டுக் கதர் வேட்டிகள் இனி தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை நன்கு அறிவர். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமக்கு அக்கறை இருப்பதுபோல் பாசாங்கு செய்ய
கொல்லப்பட்ட பதின்மூன்று வயதுச் சிறுவனின் உடல் காண்பிக்க்கப்பட்ட போது சிரித்து மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசால இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றி கேட்டபோது ராஜீவ் காந்தியின் கொலையை அதற்கு கொண்டு வந்து புரட்டிப் பேசினார். பொதுவுடமைக் கட்சி ராஜா தமிழ்நாட்டில் 100% மக்கள் இலங்கைப் போர்க் குற்றம் விசாரிக்கப்பட வேண்டியது என்று சொல்ல அதை சுப்பிரமணிய சுவாமி வன்மையாக எதிர்த்தார். தமிழ்நாட்டில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி, பார்த்தசாரதி போன்ற தமிழரல்லாதவர்கள் எப்போதும் சிங்களவர்களிற்கு ஆதரவாகவே கூச்சலிடுவர் என்பதை ராஜா மறந்துவிட்டார். மேலும் சுப்பிரமணிய சுவாமி விடுதலைப் புலிகள் இந்தியாவின் எதிரிகள் என்றும் அவர்கள் இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கொண்டுவந்தவர்கள் என்றும் உ(கு)ரைத்தார். அத்துடன் மணிப்பூர், கஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கொண்டுவது புரட்டிப் பேசினார். புலிகள் இந்தியாவிற்கு வந்து தமது முன்னாள் பிரதமரைக் கொன்றதாகக் கூறிய பார்ப்பன சுப்பிரமணிய சுவாமி ராஜிவ் காந்தியின் கொலைவெறிப்படை அமைதிப் படை என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை மறைத்துவிட்டார்.
மற்றப் பார்ப்பனரான பார்த்தசாரதி அய்யங்கர் விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயமகப் பாவித்தனர் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தினார். அவர் வேறு விதமான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றும். இலங்கையை கோபப் படுத்தினால் இந்தியா இலங்கையில் செய்து கொண்டிருக்கும் முதலீடுகளுக்கு ஆபத்து என்று புரட்டினார். அத்துடன் அந்த முதலீடுகள் தமிழர்களுக்கு நலன் புரியக் கொண்டுவந்தவை என்றும் புரட்டிப் பேசினார். மொத்தத்தில் அவர் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானம்தான் ஜெனீவாவில் கொண்டு வரப்படவேண்டும் என்றார். பார்ப்பனப் பார்த்தசாரதி இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது விடுதலைப் புலிகள் யாழ் மருத்துவ மனையில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதை தான் கண்ணால் கண்டதாகக் கூறினார். இந்திய அமைதிப்படை யாழ் மருத்துவமனை மருத்துவர்களயும் தாதிகளையும் நோயாளிகளையும் கும்பிடக் கும்பிடச் சுட்டுக் கொன்றதை மறைத்து விட்டார்.
பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் அமைக்கப்பட்ட பகவதி ஆணைக்குழுவிற்கு பெரும் முட்டுக்கட்டை போட்டவரே இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்குத் தலைமை தாங்கியதைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கு எதிராக நடாத்திய இறுதிப் போரின்போது பிறந்த 13 நிமிடங்களுக்குள் கொல்லப்பட்ட குழந்தைகள் எத்தனை என்பதை யாரும் கணக்கெடுக்கவும் இல்லை கணக்கில் எடுக்கவும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
Dear sir,
I wish to tell you something. I support tamils and i am supporting their fight for freedom. However, why you call PARPANAR. Which is cast name, and as a brahmin i am offending with this. Please understand not all brahmins think same. Karunanidhi destroyed tamils. do ever call KALLAR Karunanidhi?
Well Said Lalitha.
lalitha are u papathi then y ur asking parpanan eruntha india urupadathu
Post a Comment