Wednesday, 29 February 2012

நகைச்சுவைத் தத்துப் பித்துவங்கள்

உன் முத்தம் நன்றாயிருக்க
தினமும் என்னை முத்தமிடு
பற்பசை

நூறாண்டு நீ வாழ்ந்தால்
தொண்ணூற்றொன்பது ஆண்டும்
முன்னூற்று அறுபத்து நான்கு நாட்கள்
நான் வாழ வேண்டும்
நீ இன்றி ஒரு நாள் வாழக்கூட
என்னால் முடியாது

வெற்றியடைந்தவுடன் ஓய்ந்து விடாதே
அடுத்த வெற்றிக்கு உழை
உன் வெற்றி வெறும் அதிட்டம்
எனச் சொல்லப் பல வாய்கள் காத்திருக்கின்றன.

அப்பா: மகனே உனக்கு தம்பிப்பாப்ப வேணுமா தங்கைப் பாப்பா வேணுமா?
மகன்: எனக்கு உன் தங்கச்சியின் பாப்பா வேணும்பா.

அது ஒரு மனித இறைச்சி விற்கும் கடை
அங்கு அரசியல்வதியின் இறைச்சிக்கு
அதிக விலையிடப்பட்டிருந்தது
வெட்டித் துப்பரவாக்க
அதிக நேரம் செல்லுமாம்.

தூரத்தை மீட்டரில் அளப்பாய்
எடையை கிலோவில் அளப்பாய்
என் காதலை எதில் அளப்பாய்


காதலி: நாளை எனது பிறந்த நாளுக்கு என்ன பரிசு தருவாய்?
காதலன்: என்னையே தருவேன்.
காதலி: இப்படி ஒரு மட்டமான பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

உன்னோடு இருக்கையில் நான் நானாக இல்லை
நீயின்றி இருக்கையில் நானே இல்லை



வீடுகள் பெரிதாகின்றன
இல்லறம் சிறிதாகின்றது
மருத்துவம் வளர்கிறது
ஆரோக்கியம் குறைகிறது
பிரபஞ்சத்தில் எல்லை வரை அறியத் துடிக்கிறோம்
பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை

நேற்று என்பது தேர்வு
இன்று என்பது பரிசோதனை
நாளை என்பது எதிர்பார்ப்பு

உறவினருக்கும் நண்பனுக்கும் என்ன வித்தியாசம்?
நீ மருத்துவ மனையில் இருக்கும் போது நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்பவர் உறவினர்.
நர்ஸ் எப்படி இருக்கிறாள் என்று கேட்பவன் நண்பன்


புகைப்படத்திற்காக ஒரு கணம்
செய்யும் ஒரு புன்னகை
அதற்கு அழகூட்டுகிறது
அதையே தொடர்ந்து செய்தால்
வாழ்க்கைக்கு அழகூட்டும்

விக்கிபீடியா: எனக்கு எல்லாம் தெரியும்
கூகிள்: என்னிடம் எல்லாம் உண்டு
ஃபேஸ்புக்: எனக்கு எல்லோரையும் தெரியும்
இணையம்: நானின்றி நீங்கள் இல்லை
மின்சாரம்: நானின்றி அணுவும் அசையாது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...