Wednesday, 23 November 2011

எந்த மாவீரர் தினத்திற்குப் போவது?

2008இன் பிற்பகுதியிலும்  2009இன் முற்பகுதியிலும் இந்திய உளவுத் துறை வன்னியில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று அறியப் பல வழிகளில் முயன்றது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஊடாகவும் இதற்கான முயற்ச்சிகள் மேற் கொள்ளப் பட்டதாகவும் சில தகவல்கள் கூறின.

மாவீரர் தினம் தேசியப் போராட்டத்தின் உந்து சக்தியும் அளவு கோலுமாகும்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் புலம் பெயர் நடுகளில் தமிழ்த் தேசியவாதம் மங்கிவிடும் என்று கணக்குப் போட்டிருந்தனர் இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள். தமிழ்த் தேசியவாதத்திற்கு உள்ள ஆதரவிற்கான உந்து சக்தியாக மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவிற்கான அளவு கோலாகவும் திகழ்வது மாவீரர் தினம். 2009இலும் 2010இலும் உலகெங்கும் நடந்த மாவீரர் தினங்கள் முந்தைய மாவீரர் தினங்களிலும் பார்க்க உணர்ச்சி பூர்வமானதாகவே இருந்தன.

மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகயைக் குறைப்பதே எதிரியின் திட்டம்.
மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகையைக் குறைப்பதற்கு இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் போட்ட திட்டம் மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்பவர்களைப் பிளவு படுத்துவதே. பிளவு படுத்தியது என்று சொல்வதிலும் பார்க்க புதிதாக ஒரு குழுவை இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் உருவாக்கியுள்ளனர்.  பிளவு படுத்துவதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகளுக்கு தமிழர்களைப் பிளவு படுத்துவதில் சிறந்த முன் அனுபவம் உண்டு. மாவீரர் தினம் இரு வேறுபட்ட குழுக்களால் இப்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில்  உள்ள சாத்தியப்பாடுகள்: 1. இரு குழுக்களும் உண்மையான தேசியப் பற்றாளர்கள்; 2. இரு குழுக்களுமே துரோகிகள்; 3/4. இரண்டில் ஒன்று தேசியப்பற்றாளர்களைக் கொண்டது மற்றது துரோகிகளைக் கொண்டது. இதில் நல்ல செய்தி இரு குழுக்களுமே மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்கின்றன. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் சில ஊடகங்களில் வைக்கப் படும் ஒரு பிரச்சாரம் பெரும் அச்சத்தைத் தருகிறது:
  • மாவீரர் தினத்தை இரு குழுக்களும் ஒன்றாக ஒற்றுமையாக ஒரு இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிடில் தமிழர்கள் மாவீரர் தினத்தைப் புறக்கணித்து வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்சாரம் வெற்றி பெற்றால் தமிழின எதிரிகளுக்குத்தான் வெற்றி. இந்தப் பிரச்சாரம் இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகளின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரச்சாரத்தைப் புறந்தள்ளி எங்காவது ஒரு மாவீரர் தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்று உங்கள் அகவணக்கத்தைச் செலுத்துங்கள்


மாவீரர் கவிதை
அடக்கு முறைகள் வித்தாக
முளைத்தது விடுதலைப் போர்
அட்டூழியங்கள் உரமாக
வளர்ந்தது   விடுதலைப் போர்

மக்கள் விழித்தெழ
பரந்தது
விடுதலைப் போர்
இளைஞர்கள் கொதித்தெழ
வீறு கொண்டது
விடுதலைப் போர்

பாரதம் பாதகம் செய்ய
பலமிழந்தது
விடுதலைப் போர்
துரோகிகள் பலர் கூட
துயர் கண்டது
விடுதலைப் போர்

பன்னாட்டு சமூகம் எனும்
பன்னாடைக் கூட்டம்
பாடை கட்ட வந்தது

பின்னடைவுற்றது
விடுதலைப் போர்

கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...