Wednesday, 21 September 2011

கவிதை: பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-ஃபோனடி


ஓரப் பார்வையால் என்னை ஒளிப்பதிவு செய்வதால்
அழைப்பு விடுப்பதால் குறுந்தகவல்கள் அனுப்புவதால்
காமச் செயலிகள் பல கொண்டிருத்தலால்
பெண்ணே உன்கண்ணும் ஒரு ஐ-போனடி





தொடர்பு தேடித் துடிப்பதால்
சைகை நாடித் தவிப்பதால்
தகவற் பரிமாற்றம் செய்வாதால்
காதலும் கைப்பேசி போலே.





நாமே காதல் வெள்ளம்
நீரும் நீரும் போல் எம்
உள்ளங்கள் இணைந்தன
காற்றும் காற்றும் போல் எம்
எண்ணங்கள் இணைந்தன

பைரவியில்
ஆனந்தம் இணைந்தால்
சிருங்கார ரசம் பேசும்
சின்ன விழிகள்
காந்தமாகும்
துடிக்கும் விரல்கள்
தவிக்கும் உதடுகள்


தொடக்கத் துணிவிருந்தால்
நிறைவேற்றும் வல்லமை
தானே வரும்.






கடவுளாரின்
தவறான படைப்புக்களை
திருத்த முயன்று
தோல்வி கண்டன
மதங்கள்

3 comments:

பி.அமல்ராஜ் said...

எல்லாம் சூப்பர்.. அதென்ன பாஸ் கடைசியில ஒரு படம்???

Unknown said...

கவிதை கலக்கல். முதலாவது படத்தை பார்ர்க்கும்போது இஞ்ச ஏதோ சொல்லுது.

Anonymous said...

கடைசிப் படம் கடவுளாரின்
தவறான படைப்புக்கள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...