காது குத்துதல் தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒரு அம்சம். முதலில் பெண்பிள்ளைக்கு காது குத்துதல் ஒரு விழாவாகவே கொண்டாடப்படும். உலகெங்கும் இப்போது காதில் மட்டுமல்ல உடலின் பல வேறு இடங்களில் குத்திக் கொள்கின்றனர்.
1954-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவும் இலங்கைப் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலையும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன் பின்னணி இலங்கை இந்தியாவின் வேண்டுதலின் பேரில் கூட்டுச் சேரா நாடுகளில் இணையும். இந்தியா இலங்கை மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தமிழர் வரலாற்றில் ஒரு காதுகுத்தல்.
1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 இலங்கையில் உள்ளமலை நாட்டு தமிழ் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. மலைநாட்டுத் தொழிலாளர்களுக்கு இப்படி துரோகம் செய்தது இந்தியா. இதுவும் தமிழர் வரலாற்றில் பெரும் காது குத்து.
1980களின் ஆரம்பப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களிடை பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை சிங்களவர்களுடன் மோதவிட்டதுடன் அக்குழுக்களை ரோ அமைப்பின் சதி மூலம் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டது. இது தமிழ்த் தேசிய போராட்டத்தை பலவீனப் படுத்தவும் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டுவடவும் செய்த சதி. இதுவும் தமிழர்களுக்கு ஒரு காதுகுத்து.
ராஜீவ் காந்தி - ஜே ஆர் ஜயவர்த்தன 1987இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவென்று ராஜிவ் இலங்கைக்கு தனது கொலை வெறிப் படையை அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்தார். இது தமிழர்களுக்கு இன்னும் ஒரு காது குத்து.
இலங்கையில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது கருணாநிதி 4 மணி நேர உண்ணாவிரதத்தால் போரை முடித்ததாகப் பொய் கூறி தமிழர் சரித்திரத்தில் தனது பெயரைச் சாக்கடைக்குள் போட்டுக் கொண்டார். கருணாநிதியின் காது குத்து மன்னிக்க முடியாத காது குத்து.
இனி தமிழர்களின் காதில் குத்த இடமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment