![](http://3.bp.blogspot.com/-YZJ4dJ-AEro/Ta1B_r6RQyI/AAAAAAAAEMY/xnTRxOlFLPQ/s400/gaaa.jpg)
அழகான பெண்களுக்கு இலகுவில் வேலை கிடைக்கும் என்று நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் காண்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த பென் கூரியன் பல்கலைக்கழகம் இது பற்றி ஒரு ஆய்வை மேற் கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் அழகிகளுக்கு சாதகமாக இல்லை.
நிறுவனங்களில் ஆளணிப் பிரிவில் (Human Resources Department) இளம் பெண்களே வேலை செய்கிறார்கள். இவர்களின் சராசரி வயது 29. அத்துடன் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். இவர்கள்தான் முதலில் வேலைகளுக்கான விண்ணப்பங்களைக் கையாள்கிறார்கள். வேலைகளுக்கான விண்ணப்பதாரிகள் இப்போது தமது சொந்த விபரப் பத்திரத்துடன் தமது படத்தையும் இணைத்து அனுப்புவது அதிகரித்து வருகிறது.
நிறுவனங்களில் ஆளணிப் பிரிவில் (Human Resources Department) இளம் பெண்கள் தம் கையில் கிடைக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது அழகான் பெண்களைக் கண்டவுடன் அவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் அந்த விண்ணப்பதாரிகளை ஓரம் கட்டுகிறார்கள் என்கிறார் பேராசிரியர் பிரட்லி ரஃபில்.
பிரித்தானிய லன்காஸ்ரர் பல்கலைக்கழக முகாமைத்துவப் பள்ளிப் பேராசிரியர் கரி கூப்பர் இந்தப் பிரச்சனையை வேறு விதமாகப் பார்க்கிறார். நிறுவனங்களில் ஆளணிப் பிரிவில் (Human Resources Department) இளம் பெண்கள் தம் கையில் கிடைக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது அழகு குறைந்த பெண்கள் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். அதனால் அவர்களது விண்ணப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இரு கொள்கைகளின்படி பார்த்தாலும் பாதிக்கப்படுபவர்கள் அழகிய பெண்களே. பெண்களாலேயே பெண்களுக்கு பிரச்சனை.
இப்போதுதான் தெரிகிறது ஏன் என்னுடன் வேலை செய்வதெல்லாம் அட்டு பிஃகர்கள் என்று யாரோ முணு முணுப்பது கேட்கிறது.
2 comments:
நம்ம வேலையிடத்தில் ஆளணிப் பிரிவில் டக்கர் பிகர்கள் இருகிறாங்க..
PARKKUM KANGALAI PORUTHTHATHU ATTA ILLAI FIT AANGRATHU......
Post a Comment