
குறுங்கவிதைகள்
இன்றையப் பொழுதை நீ நடத்து
தவறவிடும் போது
நாளையப் பொழுது உன்னை நடத்தும்.
குப்புற விழுந்தாலும்
உன் நகர்வு
முன் நோக்கியதே
பின்புறம் விழுந்தாலும்
உன் பார்வை மேல் நோக்கியதே.
விடா முயற்ச்சி என்பது
நீ மட்டும் ஓடும் அஞ்சலோட்டம்
தடிகள் மட்டும் மாறிக்கொள்ளும்.
படிப்பவர்கள் மூளைசாலிகளா
மூளைசாலிகள் படிப்பார்களா
கோழியா முட்டையா
வாழ்கையில் வந்ததேன்
இதயத்தில் புகுந்ததேன்
இடையில் விலகியதேன்
நடந்ததை நினைத்து அழவில்லை
முடிந்தது என்று சிரிக்கிறேன்
2 comments:
last lines are really good
migavum arumai!
Post a Comment