Wednesday, 20 April 2011
ராஜபக்சே - மனமும் குழம்புது! குடும்பமும் குழம்புது!!
இலங்கை அதிபர் மஹிந்த ராஜ்பக்ச தனது புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் கெடுத்து விட்டதாகப் கெடுத்துவிட்டதாக புலம்பினாராம். அவரது புத்தாண்டுக் கொண்டாட்டம் மரண வீட்டுக்கு கீழே அந்தியேட்டிக்கு மேலே.
மஹிந்த ராஜ்பக்ச தனது இறுதி நிலை சதாம் ஹுசெயினுக்கு கீழே இடி அமீனுக்கு மேலே என்று நினைத்துக் கலங்கத் தொடங்கி விட்டாராம்.
ஐக்கிய நாடுகள் சபை ஒரு பக்கம் இருக்க சனல் - 4 தொலைக்காட்சி வேறு இலங்கை அரசின் அட்டூழியங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இதனால் மஹிந்த ராஜபக்சவின் நிலை பனையால் விழுந்தவனுக்கு கீழே மாட்டால் மிதிபட்டவனுக்கு மேலே.
தனது உதவாக்கரை தம்பியால்தான் இதெல்லாம் நடந்ததா என்று அவர் நினைப்பதுமுண்டாம். பசில் ராஜபக்ச மஹிந்தவைக் கவிழ்த்து விட்டு தான் பதவிக்கு வர முயற்ச்சிக்கிறாராம். இதனால் அவரது குடும்பம் வியட்னாம் வீட்டிற்கு கீழே பாமாவிஜயத்திற்கு மேலே.
தனக்கு ஏதாவது நடந்தால் அடுத்த வாரிசாக தன் மகனைக் கொண்டு வரவேண்டும் என்றும் மஹிந்த ராஜ்பக்ச நினைக்கிறாராம். இதற்கு தனது மகனை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்று கருதுகிறாராம். இதற்கு கோத்தபாய ராஜபக்ச சம்மதிக்க வில்லையாம். இந்த வாரிசுப் பிரச்சனையில் அவரது நிலை கருணாநிதிக்கு கீழே சோனியாவிற்கு மேலே.
தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச் சாட்டில் இருந்து தப்பி ஓடுவதா அல்லது நின்று போராடுவதா என்பதைப் பற்றி கடுமையாக சிந்திக்கிறாராம் மஹிந்த ராஜ்பக்ச. இதனால் இவரது நிலை ஹஸ்னி முபாரக்கிற்கு மேலே மும்மர் கடாஃபிக்கு கீழே.
இவை எல்லாவற்றையும் மனதில் போட்டுக் குழப்புவதால் மஹிந்த ராஜ்பக்சவின் நிலை பைத்தியத்திற்கு கீழே மன அழுத்ததிற்கு மேலே.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
அவர் செய்தது போர்க்குற்றத்திற்கு மேலே இனக் கொலைக்கு கீழே..
இந்த நாசமாய் போன கொலைவெறியன் இப்போது தூக்கு மரத்திற்கு கீழ் மின்சாரக் கதிரைக்கு மேல். தமிழரே விடாதீர்கள் இந்த வெறியனை நீதிக்கு முன் இழுத்து வந்து தண்டனை பெறும் வரை போராடுவோம்.
avar seithathu ellathukkum mellae..ethukkum keelea kidayathu....
Post a Comment