ஆண் பெண் உறவுகள் பற்றியும் அவர்கள் இணைந்து வாழ்வதின் நோக்கம் பற்றியும் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இருபது வயதிற்கு மேற்பட்ட 200ஆண், பெண்களிடையே பேராசிரியர் பெனெலொப் ஹுவாங் தலமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு நடந்த திருமணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இப்போது நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் நான்கு மில்லியன் பேர் திருமணமாகாமல் இணைந்து வாழ்கின்றனர்.
மேற்படி ஆய்வின் முடிபுகள் திருமணம் அல்லது இணைந்து வாழ்வது தொடர்பான நோக்கங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிபுகள் Journal of Family Issuesஇல் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் தெரிவிப்பன:
- வாழ்க்கைச் செலவைப் பங்கிடுதல் ஒன்றாக அதிக நேரம் செலவிடல் போன்றவற்றில் ஆண்களும் பெண்களும் ஒருமித்த கருத்துடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
- இணைந்து வாழ்வது அதிக உடலுறவுற்கான வாய்ப்பை அளிக்கும் என்று பெண்களிலும் பார்க்க நான்கு மடங்கு ஆண்கள் அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதல் தொடர்ச்சியானதும் உறுதியானதுமான பிணைப்புக்கு வழி வகுக்கும் என்று பெண்கள் ஆண்களிலும் பார்க்க அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதல் ஒரு திருமணம் நோக்கிய நகர்வாகவே பெண்கள் நம்புகின்றனர். ஆண்கள் அப்படி நினைப்பதில்லை
- இணைந்து வாழுதல் ஒரு உறுதியான காதலின் வெளிப்பாடு என ஆண்களிலும் பார்க்க பெண்கள் மூன்று மடங்கு அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதலில் உள்ள மிகப்பெரிய பின்னடைவு இதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை என்று பெண்கள் கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் தங்கள் தனிவாழ்க்கையின் முடிவே மிகப்பெரிய பின்னடைவு என்று நம்புகின்றனர். சில ஆண்கள் மற்றப் பெண்களுடனான உடறுவு கொள்ளும் வாய்ப்பிற்கு இணைந்து வாழுதல் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று நம்புகின்றனர்.
© 2011-03-15- Vel Tharma
1 comment:
true
Post a Comment