


ஜப்பானை சுனாமி தாக்கியதும் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சுக்கள் ஏற்பட்டதும் நாம் அறிவோம். ஜப்பானை இன்னும் ஒன்று தாக்கியது பலர் அறியவில்லை. ஜப்பானை சுனாமி தாக்கியவுடன் ஜப்பானிய நாணயமான யென்னை பன்னாட்டு நாணய வர்த்தகர்கள் தாக்கத் தொடங்கினர். ஜப்பானில் நடந்த அனர்தத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளிற்கு பன்னாட்டுக் காப்புறுதி நிறுவனங்கள் நட்ட ஈடு வழங்கும். இதனால் பல பில்லியன் பெறுமதியான நாணயம் ஜப்பானிற்கு கைமாறும். இதனால் ஜப்பானிய நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். பெறுமதி அதிகரிக்க விருக்கும் பொருளை வாங்குவது வர்த்தகர்களின் செயல். அவர்கள் உடனே யப்பானிய நாணயமான யென்னை பெருமளவில் வாங்கினர். இதனால் யென்னின் பெறுமது பலத்த அதிகரிப்பைக் கண்டது. ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் அதன் ஏற்றுமதி பாதிக்கப்படும். அமெரிக்க டொலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் பெறுமதி ஒரு யென்னால் அதிகரித்தால் டொயோட்டா(Toyota) வருமானம் 30பில்லியன் யென்னாலும் ஹொண்டாவின் வருமானம் 17பில்லியன் யென்னாலும் வீழ்ச்சியடையும். தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜப்பான் மற்ற G-7 நாடுகளின் உதவியை நாடியது. மற்ற நாடுகள் தம்மிடமுள்ள 25பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஈடான யென்களை விற்று யென்னின் பெறுமதி அளவிற்கு மேலாக வளர்வதைத் தடுத்தன.
இயற்கை அனர்த்தமும் பொருளாதார வளர்ச்சியும்.
மார்ச் -11-ம் திகதி வெள்ளிக் கிழமை ஜப்பானை சுனாமி தாக்கியது. இது முன்பு நடந்த சுனாமித் தாக்குதல்களிலும் பெரியது. அமெரிக்கா ஹிரோசிமாவில் போட்ட அணுக்குண்டிலும் பார்க்க 30,000மடங்கு வலுவுள்ள சுனாமி இது. 1995-ம் ஆண்டு ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் கோபியில் நடந்த இந்த சுனாமி அனர்த்தத்தால் 100பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டது. உலகத்தில் பொருளாதர ரீதியில் முன்றாம இடத்தில் இருக்கும் ஜப்பானின் பொருளாதரம் இதைத் தாங்கிக் கொண்டது. 1994-ம் ஆண்டு 0.9%ஆக இருந்த ஜப்பானியப் பொருளாதார வளர்ச்சி சுனாமி தாக்கிய 1995-ம் ஆண்டு 1.9%ஆக உயர்ந்தது. ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் போது அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஒரு நாட்டின் ஒரு பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால். அந்தப் பகுதியில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பீட்டை மற்றப் பகுதியில் ஏற்படும் அதிகரித்த உற்பத்தி அதிகரிக்கும். பல கட்டுமான வேலைகள் புதிதாக ஆரம்பிக்கும். டொயோட்டா மார்ச் -11-ம் திகதி வெள்ளிக் கிழமை ஜப்பானை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து உதிரிப்பாக விநியோகங்கள் பாதிக்கப் படுவதால் தனது உற்பத்திகள் பாதிக்கப்படும் என்று முதலில் அறிவித்தது. பின்னர் மார்ச் 16-ம் திகதி தனது உற்பத்தி வழமை போல் தொடரும் என்று அறிவித்தது. சொனியின் ஆறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. இந்த உற்பத்தி வேறு இடங்களுக்கு மாற்றப்படும். இயற்கை அனர்த்தம் உற்பத்திகளை நிறுத்தாது சிறிதுகாலம் தள்ளி வைக்கும். மீள ஆரம்பிக்கும் போது முன்பு இருந்ததிலும் அதிகரித்த உற்பத்தியே ஏற்படும். இதனால் தான் முன்பு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட 1995இல் ஜப்பானியப் பொருளாதாரம் அதற்கு முந்திய ஆண்டிலும் பார்க்க இரண்டு மடங்கிலும் அதிகரித்த வளர்ச்சியைக் கண்டது. ஆனால் 2011-03-11இலன்று ஏற்பட்ட சுனாமி ஜப்பானின் பாதிக்கப்படாத பல பகுதிகளிலும் மின் தடையை ஏறபடுத்தியுள்ளது. இது ஒரு பெரும் சவாலாக ஜாப்பானியர்களுக்கு அமையும்.
ஜப்பானிய வட்டி வீதம் ஒரு பின்னடைவு
ஒரு நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க அது தனது நாட்டின் வட்டி வீதத்தை குறைக்கும். ஜப்பானின் பொருளாதரத்தை மீள் கட்டி எழுப்பவும் கொள்வனவு செய்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கவும் அங்கு அதிக பணப்புழக்கம் தேவை. ஜப்பான் தனது வட்டி வீதத்தை குறைக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் தற்போதைய வட்டி வீதம் பூச்சியம்.
எரிபொருள் விலை
எரிபொருள் விலை வடக்கு ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க பல நாடுகளில் அணு மின் உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டன. முக்கியமாக இந்தியாவிற்கு அணுத் தொழில் நுட்பத்தை விற்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சியும் அதிகரிக்கும் எரி பொருள் விலைகளைச் சமாளிக்கவே. அதிக மக்கள் தொகையும் அதிக பொருளாதார வளர்ச்சியும் கொண்ட சீனாவின் எரிபொருள்தேவை மிக மிக அதிகமானது. உலகிலேயா அதிக அணு உலை நிர்மாணம் சீனாவில் நடக்கிறது. சீனாவில் 27 அணு உலைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் 50 அணு உலைகளை நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து சீனா தனது அணு உலை நிர்மாணங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜேர்மனி தனது அணு மின் உற்பத்தியை இடை நிறுத்தியுள்ளது. இவையாவும் உலகச் சந்தையில் எரிபொருள்களின் விலையை மேலும் அதிகரிக்கும்.
Just-in-Time Technique உரிய நேர உற்பத்தித் தொழில் நுட்பம்.
கடந்த இருபது ஆண்டுகளாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திப் பொருள்களையோ மூலப் பொருள்களையோ அதிக அளவில் இருப்பில் வைப்பதில்லை. தேவையான நேரத்தில் வாங்கி தேவையான நேரத்தில் விநியோகிக்கும் முறைமையைப் பின்பற்றுகின்றன. இவை உற்பத்திச் செலவைக் குறைக்கும். ஆனால் ஒரு இயற்கை அனர்த்தம் நிகழும் போது இந்த முறைமை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உற்பத்தியில் ஏற்படும் தற்காலிக நிறுத்தம் தற்காலிக தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து Smart phoneகளிற்குத் தேவையான chips தாயாரிப்புக்கள் பாதிப்படைந்துள்ளன. ஐபோன் ஐபாட் ஆகியவற்றின் உற்பத்திகள் பாதிப்படையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
All rights, including copyright, in the content of these veltharma.blogspot.com pages are owned or controlled for these purposes by Vel Tharma. All rights reserved
1 comment:
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி ஜப்பானியப் பொருளாதாரத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வு
Post a Comment