
அணுவின் உள் பகுதியில் சேகரிக்கப்படும் சக்தியே அணு சக்தியாகும். அணுக்களை பிளந்தும் சக்தியைப் பெறலாம். அணுக்களை இணைத்தும் சக்தியைப் பெறலாம். பெரும்பாலாக அணுவைப் பிளந்தே சக்தி பெறப்படுகிறது. அணுவைப் பிளக்கும் போது நியூத்திரன்களும் வெப்பசக்தியும் வெளிவரும். யூரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகிய மூலப்பொருள்களில் இருந்து அணு சக்தி உற்பத்தி செய்யலாம். அநேகமக யுரேனியத்தில் இருந்தே அணு சக்தி பெறப்படுகிறது.
யூரேனியம் பதப்படுத்தல் மூலம் கதிரியக்கயுரேனியமாக மாற்றப் படுகிறது. பின்னர் கட்டுப்படுத்தப் பட்ட நிலையில் அது பிளக்கப் பட்டு சக்தி உருவாக்கப்படுகிறது. பதப்படுத்தப் பட்ட யுரேனியம் சிறு உருண்டைகளாக்கப் பட்டு நீளமான குழாய்களில் போடப்படும். இந்தக் குழாய்கள் Reactor எனப்படும் கலன்களில் இடப்படும். முதலில் ஒரு பகுதி யுரேனியம் பிளக்கப்பட அதிலிருந்து வெப்ப சக்தியும் நியூத்திரனும் வெளிவர, நியூத்திரன் மற்ற அணுக்களைப் பிளக்கிறது. இப்படிப்பட்ட தொடர்ச்சியான செயன்முறையால் அதிக சக்தி அதாவது வெப்பம் Reactor எனப்படும் கலன்களில் வெளிவிடப்படும். Reactor எனப்படும் கலன்களுல் நீர் குழாம் மூலம் செலுத்தப்படும். அங்குள்ள வெப்பத்தால் நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கப்படும். இந்த ஆவி பெரிய ஒரு கொதிகலனில் உள்ள நீரை கொதிக்க வைக்க அனுப்பப்படும். அந்தக் கொதிகலனில் இருந்து வெளிவரும் ஆவி சக்கரங்களைச்(Steam Turbines) சுற்ற வைக்கும். சுற்றும் சக்கரங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
நீர் தொடர்ச்சியாக செலுத்தப் பட்டுக் கொண்டே இருத்தல் இங்கு முக்கியம். சகல இயக்கங்களும் நிறுத்தப்பட்ட நிலையிலும் நீர் தொடர்ந்து ஓடாவிடில் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு ஆரம்பிக்கும்.

குழாய்களில் உள்ள யுரேனியம் அணுப்பிளவடைந்து வெப்பத்தை உருவாக்கும். அந்த வெப்பம் குழாய்களைச் சுற்ற இருக்கும் நீரைக் கொதிக்கச் செய்யும். நீராவி மின் பிறப்பாக்கிகளுக்கு அனுப்பப்படும்.

அணு உலை நிறுத்தப்பட்டவுடன் கட்டுப்பாட்டுக் குழாய்கள் யுரேனியம் இருக்கும் குழாய்களிடை செருகப்படும். கட்டுப்பாட்டுக் குழாய்களூடாக தொடர்ச்சியாகப் பாயும் நீர் யுரேனியம் குழாய்கள் வெப்பமடையாமல் தடுக்கும்.

ஜப்பானில் மின்சாரம் தடைபட்டதால் கட்டுப்பாட்டுக் குழாய்களூடாக நீர் தொடர்ச்சியாக செலுத்த முடியாமல் போனது.
ஜப்பானில் நடந்தது
பன்னாட்டு அணு வலுக் கண்காணிப்பகம் இரு வருடங்களுக்கு முன்பே யப்பானிய அரசிற்கு யப்பானில் உள்ள அணு உலைகள் 6.5 அளவிற்க்கு மேலான பூமி அதிர்ச்சியைத் தாங்கமாட்டாது என்று எச்சரித்திருந்தது. அதை யப்பானிய அரசு ஏற்று நடக்கவில்லை என்று இப்போது செய்திகள் கூறுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் மூன்று தடவை மட்டுமே யப்பனிய அணு உலைகளின் பாது காப்புப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. யப்பானிய அரசு ஒரு அவசர நடவடிக்கை நிலையத்தை மட்டுமே ஏற்படுத்தி இருந்தது. அணு உலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. யப்பானிய் அணு உலைகள் 7அளவிலான பூமி அதிர்ச்சியை மட்டுமே தாங்கவல்லன. 11-ம் திகதி மார்ச் மாதம் நடந்த பூமி அதிர்ச்சியின் அளவு 9 ரிச்சர் அளவுகோலுடையது. 2008-ம் ஆண்டு யப்பானில் நடந்த G-8 நாடுகள் கூட்டத்திலும் உலகெங்கும் உள்ள அணு உலைகளின் பாதுகாப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது.



ஜப்பானில் தீயணைப்பு எந்திரங்கள், கலவரம் அடக்கப் பாவிக்கப் படும் நீர்ப்பாய்ச்சிகள், ஆகாயத்தில் இருந்து வான் கலங்கள் போன்றவை மூலம் அணு உலைகள் மீது நீர் ஊற்றப்பட்டன. ஊற்றப்பட்ட நீர்கள் சரியான இடத்தை அடையாததால் போதிய நீர் ஊற்றப்படவில்லை. ஊற்றப்பட்ட நீர் ஆவியாகி வெளியேறிவிட்டது. இதனால் உலை வெப்பமடைவதைத் தடுக்க முடியவில்லை.
மேலும் ஒரு ஆபத்து
பாதிக்கப்பட்ட அணு உலையில் ஏற்கனவே பாவிக்கப்பட்ட பல யுரேனியம் கொண்ட குழாய்கள் தனியான இடத்தில் நீருக்குள் வைக்கப்பட்டுள்ளன. அவையும் நீரின்றி வெப்பமடைகின்றன.
தற்கொலைக்கு ஒப்பான தியாகம் செய்ய வந்த ஊழியர்கள்
Tokiyo Electric Power Company(TEPCO)என்னும் ஜப்பானிய நிறுவனம் பாதிக்கப் பட்ட அணு உலைகளை நடாத்தி வந்தது. இப்போது TEPCO ஜப்பானிய மக்களாலும் ஊடங்கங்களாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காததாலும் உலையின் கதிர் வீச்சு பற்றி சரியான தகவல்களை வெளியிடாததாலும் பலமாகக் கண்டிக்கப்படுகிறது. TEPCOஊழியர்கள் பலர் ஆபத்தான இடத்தை விட்டு விலகாமல் அங்கு தொடர்ந்து இருந்து பணியாற்றி வருகின்றனர். சில TEPCO ஊழியர்கள் தமது நாட்டு மக்களைக் காக்கும் பொருட்டு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். ஆபத்தான கதிரியியக்க முள்ள அணு உலைகளுக்கு அண்மையாக உள்ள சுனாமி நீரால் பழுதடைந்த டீசல் மின்பிறப்பாக்கிகளை இயங்கச் செய்து அதனால் அணு உலைக்கான தொடர் நீர்பாய்ச்சலை உறுதி செய்யவதே இவர்களின் நோக்கம்.
விம்மி அழுத TEPCO இன் நிர்வாக இயக்குனர்
18-ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த TEPCO இன் நிர்வாக இயக்குனர் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் ஆபத்தானது என்று முதல் தடவையாக ஏற்றுக் கொண்டார். பத்திரிகையாளர்களுடன உரையாடிய பின்னர் அவர் விம்மி அழுதார். ஜப்பானிய அணுசக்திப் பாதுகாப்பு முகவரகம் அணு உலைகளில் இருந்து வரும் கதிர்வீச்சு தரம்-5 வகையைச் சேர்ந்தது என்பதை ஒத்துக் கொண்டார். இந்தத் தர கதிரியக்கம் உயிராபத்து விளைவிக்கக் கூடியது.
ஐக்கிய நாடுகள் சபையின் அணு சக்தி முகவரகம் முன்னர் வெளியிட்ட கருத்துப்படி அணு உலைகளில் நிலமை கவலைக்கிடம் ஆனால் இன்னும் மோசமடையவில்லை.
மண்போடும் திட்டம்
இரசிய செர்னோபிலில் 1986இல் அணு உலை வெடித்தபோது கடைசி நடவடிக்கையாக அணு உலையை மண்ணாலும் சீமெந்தாலும் மூடி கதிரியகம் தடுக்கப்பட்டது. இதையே ஜப்பானும் செய்ய யோசிக்கிறது.
© 2011-03-18 Vel Tharma
4 comments:
முதல் வணக்கம்
அப்படியே மண்னோடு மண்னா போக போகுதா..
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி..
It is an excellent posting
Thanks
http://spotcines.blogspot.com
Post a Comment