Thursday 18 August 2011

பிரித்தானிய நீதி மன்றில் இந்தியச் சாதிப் பிரச்சனை

பிரித்தானியவில் இந்தியக் கலாச்சாரம் ஒரு அடையாளமாக உருவெடுத்துவிட்டது. இந்துக் கோவில்கள் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன. இந்திய உணவகங்கள் இல்லத நகரங்களே இல்லை.  இந்திய ஆடைகள் அணிந்தவர்களை எங்கும் காணலாம். இப்போது இந்தியச் சாதிப் பிரச்சனையும் பிரித்தானியாவில் வேரூன்றி விட்டது. அந்த அந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கிடையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து தங்கள் பிள்ளைகளை தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுடன் பழகவிட்டு திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

பிரித்தானிய நீதமன்றத்திற்கு ஒரு இளம் இந்தியத் தம்பதிகளின் சாதிப் பிரச்சனை வந்துள்ளது. இந்த வழக்கை பிரித்தானிய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹீர் மனக் என்னும் ஓர் இந்தியருக்கு சொந்தமான சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விஜய் பேர்க்ராஜ் என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் அதே இடத்தில் வேலை செய்யும் அமர்தீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது இவர்கள் வேலை செய்யுமிடத்தில் மற்ற உயர் சாதி இந்துக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது.

விஜய்-அமர்தீப் திருமணத்திலேயே பல உயர் சாதி இந்தியர்கள் திருமணத்தைப் பற்றி கடுமையாகப் பேசினார்கள். திருமணத்தின் போது மதுக்கிண்ணத்தை உயர்த்தி மணமக்களை வாழ்த்துவது வழக்கம். அப்போது ஒருவர் 'raised a toast to Jat girls going down the drain' சாக்கடைக்குப் போது உயர்ச் சாதிப் பெண்ணுக்காக உங்கள் மதுக் கிண்ணத்தை உயர்த்துங்கள் என்றாராம்.

விஜய்-அமர்தீப் காதலிக்கத் தொடங்கியதை அறிந்தவுடனேயே அவர்களுக்கு வேலையிடத்தில் பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்கிவிட்டனராம். அமர்தீப்பிற்குத் தண்டனையாக அவருக்கு அதிக வேலைகள் கொடுக்கப்பட்டு அவரது உதவியாளர்களும் குறைக்கப்பட்டனர்.



 இந்தியர்களின் நிறவெறி
விஜய்-அமர்தீப் திருமணத்தைத் தொடர்ந்து விஜய் வேலையில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். பிரித்தானியாவில் சாதி அடிப்படையில் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வந்தது இதுவே முதற்தடவை. பிரித்தானிய ஊடகங்களுக்கு இந்திய மாமி மருமகள் பிரச்சனை, பெண் அடிமை, சாதி போன்றவை பற்றி எழுதுவதில் நல்ல பிரியம். அவர்களுக்கு இப்போது அல்வா கிடைத்துள்ளது. இந்தியாவில் நிறப்பிரச்சனை பெரிய பிரச்சனை என்று விஜய்-அமர்தீப் திருமணத்தின் சாதிப் பிரச்சனைபற்றி எழுதிய டெய்லி மெயில் என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. கரிய நிறத் தோலை வெள்ளை நிறமாக்கும் முகப்பூச்சு ஆசியாவில் பன்னிரண்டு பில்லியன் பவுண்களுக்கு விற்பனையாகிறது என்று எழுதிய டெய்லி மெயில் இந்தியாவில் கருமையான நிறத்தவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றும் வெள்ளைத் தோல் உள்ளவர்கள் உயர் சாதியினர் என்றும் கிண்டலடித்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...