Friday 19 August 2011

கடாஃபி தப்பி ஓடத் தயாராகிறாராம்.

திரிப்போலியில் இருக்கும் இரு விமானநிலையங்களில் நடக்கும் ஏற்பாடுகளையும் அங்கு செல்லும் ஆடம்பர வண்டிகளையும் பார்க்கும் போது லிபியத் தலைவர் தளபதி மும்மர் கடாஃபி தப்பி ஓடுவதற்குத் தயாராகிறார் என்று அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது கடாஃபிக்கு ஆதரவான படைகளின் மனோபலத்தைக் குறைக்கப் பரப்பப்படும் பொய்ப்பிரச்சாரமாகவும் இருக்கலாம்.

தென் ஆபிர்க்காவில் இருந்தும் ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்தும் விமானங்கள் வந்து திரிப்போலி விமான நிலையங்களில் தரை இறங்கியுள்ளதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதம் மும்மர் கடாஃபி விமானம் ஒன்றில் தென் அமெரிக்க நாடான வெனிசுலேவியாவிற்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் என்றான் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர்.


நேற்று மும்மர் கடாஃபியின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி எண்ணெய் வள நகரான ஜவியா கிளர்ச்சிக்காரர்களின் வசமானது என்று தகவல்கள் தெரிவித்தன. இனி கடாஃயின் படைகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் சில படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காடாஃபியைப் பற்றி நன்கறிந்தவர்கள் இனிக் கடும் போர் நிகழலாம் என்கின்றனர்.

ஊடகங்களை கடாஃபி நாய்கள் என்று விமர்சித்தார். அதை எதிர்க்கும் கருத்துப்படம்.

ஆகஸ்ட் 13-ம் திகதியில் இருந்து திரிப்போலிக்கும் துனிசியாவிற்கும் இடையிலான தொடர்புகளை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் துண்டித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடாஃபி ஆதரவுப் படைகளுக்கான கடைசி வழங்கல் பாதை துண்டிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து திரிப்போலியில் எரிபொருளுக்கும் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திரிப்போலியில் ஒரு வாகனத்தை பெற்றோலால நிரப்ப $150 செலவாகிறதாம். உணவுப் பொருள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிகிறது கடாஃபியின் தலைநகரில்

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை(இன்று) காலை திரிப்போலியில் கடாஃபியின் இருப்பிடத்தை இலக்கு வைத்து நேட்டோ விமானங்கள் குண்டுகள் வீசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

1 comment:

Anonymous said...

ஒருவர் தப்பி ஓடுவதாக எத்தனை தடவை சொல்லுவார்கள்?
இதற்கிடையில் வெள்ளிக்கிழமை(இன்று) காலை திரிப்போலியில் கடாஃபியின் இருப்பிடத்தை இலக்கு வைத்து நேட்டோ விமானங்கள் குண்டுகள் வீசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கடாஃபி கொல்லப்பட்டதாக ஏன் தெரிவிக்கவில்லை?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...