Wednesday, 17 August 2011

மாதக் கணக்காக எண்ணப்படும் கடாஃபியின் நாட்கள்

லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் முடிவுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அமெரிக்க வெள்ளை மாளிகைப் பேச்சாளர்  ஜே கார்ணி செவ்வாயன்று தெரிவித்தார். 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கரிஜாம், திஜி என்னும் இரு நகர்களைக் காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் 15-08-2011இலன்று கைப்பற்றி விட்டார்கள்; லிபியத் தலைநகர் திரிப்போலிக்கான வழங்கற்பாதைகள் இதனால் காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன என்று சில ஊடகங்கள் கூறின. அது மட்டுமல்ல கடாஃபியின் படையின் உயர் அதிகாரி ஒருவர் எகிப்திற்கு தப்பி ஒட்டிவிட்டார் என்றும் கூறின. ஆனால் கடாஃபி அப்படி ஒன்றும் சாதாரணமானவர் அல்லர். உடன் பதிலடியாக கடாஃபி கிளர்ச்சிக்காரர்கள் மீது முதன் முறையாக ஸ்கட் ஏவுகணைகளை வீசி அவரது எதிரிகளின் நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்கினார். கடாஃபியிடம் இருநூறு ஸ்கட் ஏவுகணைகள் இருக்கின்றன. இன்னும் என்ன ஆயுதங்களை அவர் வைத்திருக்கிறார்? நேட்டோப் படைகள் வீசிய குண்டுகளால் கடாஃபியின் ஆயுதக் கிடங்குகளை ஏன் அழிக்க முடியவில்லை? கடாஃபியின் ஸ்கட் ஏவுகணை இலக்குத் தவறிவிட்டது என்றும் எந்தவித சேதங்களையும் விளைவிக்கவில்லை என்றும் நேட்டோப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த மாதக் கடைசியில் கடாஃபியைக் கவிழ்ப்போம்
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் அப்தல் ஜலீல் ஆகஸ்ட் மாத முட்வுக்குள் கடாஃபியின் அரசைக் கவிழ்த்து விடுவோம் என்றார். துனிசியாவில் கடாஃபியின் அரச பிரதிநிதிகளுடன் தாம் பேச்சு வார்த்தை நடாத்தியதாக வெளிவந்த செய்திகளையும் அவர் மறுத்தார்.

சூட்டிகையான வல்லரசின் தந்திரோபாயப் பொறுமை.
ஹிலரி கிளிண்டன் ஐக்கிய அமெரிக்க ஒரு சூட்டிகையான வல்லரசு(Smart power) என்கிறார். அமெரிக்காவை உயர் வல்லரசு(supper power) என்ற நிலையில் இருந்து உயர்த்தி அதை ஒரு சூட்டிகையான வல்லரசு(Smart power) ஆக்கிவிட்டார்களாம். அதனால் அமெரிக்கா இப்போது லிபியா சம்பந்தமாகவும் சிரியா சம்பந்தமாகவும் (strategic patience) தந்திரோபாயப் பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்களாம்.

2011 மார்ச் 24-ம் திகதி ஃபிரெஞ்சு வெளிநாட்டமைச்சர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் படைபலம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நொருக்கப்பட்டுவிடும் என்றார். ஆனால் கடாஃபி இன்றுவரை தாக்குப் பிடிக்கிறார். பெப்ரவரி 21-ம் திகதி பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் கடாஃபி வெளி நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்றார். கடாஃபி இன்றும் லிபியாவில்தான் இருக்கிறார்.

ஜவியா (Zawiyah) நகர் பற்றி முரண்பட்ட செய்திகள்
துனிசிய லிபிய எல்லை நகரான ஜவியா நகர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. ஜவியா (Zawiyah) நகர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டால் அது திரிப்போலி நகரின் கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறாக அமையும் என்று ஜோர்ஜ் ஜொஃப் என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லிபிய அறிவியலாளர் தெரிவித்தார். ஆனால் இது ஒரு நீண்டகாலப் போருக்கான ஆரம்பமே என்றும் அவர் தெரிவித்தார். ஜவியா (Zawiyah) நகரை கடாஃபி இழந்தால் அவரது வெளியுலகத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்படும் என்றும் சில படைத்துறை ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். துனிசிய லிபிய எல்லை நகரான ஜவியா நகர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. ஜவியா (Zawiyah) நகர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டால் அது திரிப்போலி நகரின் கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறாக அமையும் என்று ஜோர்ஜ் ஜொஃப் என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லிபிய அறிவியலாளர் தெரிவித்தார். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இன்னும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படையாக உருவாகவில்லை. கைப்பற்றி நில நகரங்களைத் தக்க வைப்பதற்கே அவர்கள் பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது.


கடாஃபியின் பலம்.

கடாஃபியின் கையில் 144 தொன் தங்கம் இருக்கிறது அதன் மதிப்பு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு கடாஃபியால் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் இன்னும் தாக்குப் பிடிக்க முடியும். இன்னும் கடாஃபியின் கட்டுப்பாட்டில் எண்ணெய் வளங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விடப் பெரியபலம் திரிப்போலியைச் சூழவுள்ள பல இனக் குழுமங்கள்(Tribes). இந்த இனக் குழுமங்கள் கடாஃபியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளன. கடாஃபியின் அரசு கவிழ்ந்தால் தமது இருப்புக்கு ஆபத்து என்று அவை நம்புகின்றன. காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களால் இந்த இனக்குழுமங்களைத் தாண்டி திரிப்போலியைக் கைப்பற்றுவது சிரமமான பணி. கடாஃபியின் நாட்கள் இன்னும் பல மாதங்கள் எண்ணப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...