Monday, 4 April 2011

கடாஃபியின் குடும்பத்தைப் பற்றி புதிய செய்தி: புரளியா? தந்திரமா?



லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் இரு புதல்வர்கள் அவருக்கு எதிராக சதிசெய்வதாக புதிய புரளி இப்போது வெலிவந்துள்ளது.

மும்மர் கடாஃபியின் இலண்டனில் படித்த ஒரு புதல்வரான சயிஃப் கடாஃபியும் இத்தாலியில் உதைபந்தாட்டம் ஆடிய சாதி கடாஃபியும் தந்தையைப் பதவியில் இருந்து விலக்கிவிட்டு தாம் இடைக்கால அரசுக்கு தலைமை தாங்கத் தயாரக உள்ளதாகவும் அதற்குப்பதிலாக நேட்டோப் படையினர் லிபியா மீதான குண்டுத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சயிஃப் கடாஃபி பிரித்தானிய இத்தாலிய உளவுத் துறையுடன் தொடர்பு கொண்டு இப்போது உள்ள ஆட்சியில் மாற்றம் ஏற்படும் வரை தானும் சகோதரர் சாதி கடாஃபியும் இடைக்கால அரசுக்கு பொறுப்பாக இருப்பதாகவும் மும்மர் கடாஃபி பதவியில் இருந்து விலக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்படுகிறார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு.

இரு புதல்வர்களும் மும்மர் கடாஃபியின் ஏற்பாட்டின் பேரிலேயே இப்படிச் செயற்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மும்மர் கடாஃபி தனது பதவியைப் பாதுகாக்கவும் அவர் செய்யும் தந்திர நாடகம் இதுவாகவும் இருக்கலாம். பொதுவாக பெற்றோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்கள் வெளிநாட்டு நிதி வைப்புக்களை ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளில் வைப்பிலிட்டு வைப்பது வழக்கம். தேவைப்படும் நேரங்களில் அவற்றை அரசுகள் முடக்கி வைப்பதும் உண்டு. இதை முன் கூட்டியே உணர்ந்த மும்மர் கடாஃபி தனது நிதி வளத்தை தங்கங்களாக வாங்கி தனது நாட்டிலேயே குவித்து வைத்துள்ளார். மும்மர் கடாஃபியிடம் 143.8தொன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலகிலேயே அதிக மசகு எண்ணைக் கையிருப்பும் லிபியாவிடம் உள்ளது. ஆனால் லிபியாவின் பெரும்பாலான எண்ணெய் வளம் இப்பொது கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் உள்ளது.

தொடரும் நேட்டோ கூட்டமைப்பின் தாக்குதல்களும் எண்ணெய்த் தாகமெடுத்துத் துடிக்கும் மேற்குலக அரசுகளும் உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் மும்மர் கடாஃபியின் அதிகாரத்திற்கு பலத்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மத்தியில் மும்மர் கடாஃபி தனது காய்களை நகர்த்துகிறாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...