Monday, 4 April 2011
தாய்ப்பால் தரும் பசுக்களை உருவாக்கிய சீனர்கள்
மரபணுக்களை மாற்றியதன் மூலம் தாய்ப்பால் தரும் பசுக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனித மரபணுக்களைக் கொண்ட 300 பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் நின்ங் லீ தலைமையில் ஒரு விஞ்ஞானிகள் குழு இந்தச் செய்துள்ளனர்.
தாய்ப்பாலில் உள்ள human lactoferrin & lysozyme எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் புரதம் இந்தப் புதிய பசுக்கள் தரும் பாலில் உள்ளன என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.
இந்தக் கண்டு பிடிப்பிற்கு பல எதிர்ப்புக்களும் கிளர்ந்துள்ளன. தாய்ப்பால் பிள்ளைக்குத் தேவையான சகல ஊட்டச் சத்துக்களைக் கொண்டதும் வளர்ச்சிக்குத் தேவையானவற்றையும்,நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொண்டதுமாகும். இதற்கு இணையானதாக இந்தப் பசுப்பால் இருக்குமா என்பது பலத்த சோதனைக்கு உள்ளாக்கப் பட வேண்டும் என்கின்றனர். இந்தப் பாலில் எமக்குத் தெரியாத எம்மால் கண்டறிய முடியாத பல ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் சிலர் அஞ்சுகின்றனர்.
இந்த சீனப் பரீட்சார்த்த நடவடிக்கை மிருகங்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தப் பரிசோதனையில் உருவாக்கப்பட்ட 42 கன்றுகளில் 26 மட்டுமே தப்பியது. மற்றவை இறந்து விட்டன.
சீனாவில் உள்ள மரபு அணு மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் ஐரோப்பியாவில் உள்ளவை போல் இல்லை.
இந்திய விஞ்ஞானிகள் கராம்பசுக்களை உருவாக்கினால் அடுத்த தேர்தலில் அவற்றை இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு வசதியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment