
இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியை ஒரு தன்னினச் சேர்க்கையாளர் என்று ஜோசெப் லெலிவெல்ட் எழுதி சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். கலென்பேர்க் என்னும் யூதருக்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாக வைத்து இந்த மாதிரியான குற்றச் சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் கடிதங்களைப் பரிசீலனை செய்த மனோதத்துவியலாளர் சுதீர் காகர் அவற்றை வைத்துக் கொண்டு மகாத்மா காந்தி ஒரு தன்னினச் சேர்க்கையாளர் என்று கூற முடியாது என்றார். Great Soul Mahathma Gandhi and his struggle with India என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் காந்தியைப்பற்றி அவதூறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கப் பத்திரிகை ஒன்றும் பிரித்தானியப் பத்திரிகை ஒன்றும் செய்திகள் வெளிவிட்டன.
"How completely you have taken possession of my bodyGandhi to Kallenbach. This is slavery with a vengeance." என்பது காந்தி எழுதிய கடிதத்தில் உள்ளடக்கப்படிருக்கிறதாம்.
சுதிர் காகர் என்னும் மனோதத்துவவியலாளர் கடிதத்திற்கு பிழையான வியாக்கியாம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார். அத்துடன் காந்தியின் இரு பெரும் நோக்கங்கள் அகிம்சையும் பிரம்மச்சாரியமும் என்கிறார். இந்து மதத் தத்துவப்படி பாலுணர்வை அடக்கினால் பெரும் சக்தியைப் பெறலாம். காந்தி அப்படிச் செய்து பெரும் அரசியல் சக்தியைப் பெற்றார் என்கிறார்.
பிரித்தானிய கார்டியன் பத்திரிகைக்கு நூல்லாசிரியர் "The word 'bisexual' nowhere appears in the book." என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment