Wednesday, 30 March 2011
போர் முனையில் கடாபியின் கவர்ச்சியான மகள்
லிபிய அதிபர் மும்மர் கடாபி இன்னும் ஒரு ஆயுதத்தை தனக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை அடக்கும் போரில் களமிறக்கியுள்ளார். அது அவரது 34 வயதான அழகிய ஒரே ஒரு மகள் ஆயிஷா. சட்ட வல்லுனரான இவர் சதாம் ஹுசேய்னுக்காக வாதாடிப் புகழ்பெற்றவர். கடாபி தத்தெடுத்து வளர்த்த இவரது தங்கை 2006இல் அமெரிக்க விமானங்கள் கடாபியைக் கொல்லும் நோக்குடன் வீசிய குண்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிஷா மேற்குலக நாடுகளை வெறுக்கத் தொடங்கினார். தனது தங்கையில் அலறல் கேட்டு ஒன்பது வயதாயிருக்கும் போது விழித்தவருக்கு அவரது உடல் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அண்மையில் இவரது 26வயது தம்பி கமிக்காஸ் கிளர்ச்சிக்காரர்களின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். அதனால் போர்முனை வரை சென்று பணியாற்றுகிறார். இவரால் பல வீரர்கள் உற்சாகமடைவார்கள் என்பது நிச்சயம்.
தந்தை கடாபியின் படைகளுடன் போர் முனையில் நின்று இவர் பணிபுரிகிறார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பற்றியுள்ளார். கடாபியை தனது நண்பன், சகோதரன், தந்தை, தலைவன், பாதுகாவலன் என இவர் புகழ்கிறார். பெண் உரிமைவாதியாகவும் செயற்படுகிறார்.
இசுலாமிய வழக்கப்படி தனது ஒன்று விட்ட சகோதரனும் படைத் தளபதியுமான அஹமட் அல் கடாபி அல் ஹாசியைத் திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுக்கு இவர் தாயுமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment