![](http://2.bp.blogspot.com/-hJZCeB0WgwM/TZRWGom1cGI/AAAAAAAAEDI/yGeRPg3V_aA/s400/%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AE%25BE.jpg)
பலகாலமாக இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இருந்த விரோதம் காரணமாக ஒரு குழுவைச் சேர்ந்தவர் துப்பாக்கியைக் கொண்டுவந்து மற்றக் குழுவினரை நோக்கிச் சுட்டார். இதில் தனது மாமனாரின் பிறந்த நாளிற்கு பரிசு கொடுக்க குடும்பத்தினருடன் சென்ற ஐந்து வயதுச் சிறுமியி துஷாரா கமலேஸ்வரனின் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரும் இன்னொரு 35 வயது தமிழரான சீலன் என்னும் ஆணும் படுகாயமடைந்துள்ளனர்.
கிழக்கு இலண்டன் Ilfordஇல் வாழும் துஷாரா குடும்பம் தெற்கு இலண்டன் Stockwellஇல் வசிக்கும் மாமாவைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து பரிசு கொடுக்கச் சென்ற வேளையிலேயே இப்பரிதாபகரமானா சம்பவம் நடந்துள்ளது.
துஷாரா தனது பெற்றோரின் கண்முன்னே இரத்த வெள்ளத்தில் தோய்ந்தார். இபோது அவர் மருத்த மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். உயிராபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இப்போது chemically-induced coma நிலையில் இருக்கிறார் தமிழ்படங்களிலும் நடனத்திலும் மிகவும் பிரியமுள்ள துஷாரா.
14வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பிரித்தானியாவில் இளைஞர் குழுக்கள் தமக்கு பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்க பாணியில் ஒன்றுடன் ஒன்று மோதுவது அதிகரித்து வருகிறது. GAS, AMD எனப் பெயர்கள் கொண்ட குழுக்களே இந்தக் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன.
4 comments:
இந்த தெருப்பொறுக்கி நாய்களை பிடித்து சிஙகளவனிடம் அனுப்பி வையுங்கள். அவன் நல்ல பாடம் புகட்டுவான். போன இடத்தில் வாழத் தெரியாத நாய்கள்.
இந்த தெருப்பொறுக்கி நாய்களை பிடித்து சிஙகளவனிடம் அனுப்பி வையுங்கள். அவன் நல்ல பாடம் புகட்டுவான். போன இடத்தில் வாழத் தெரியாத நாய்கள்.
இது பிரித்தானியாவில் மட்டுமல்ல,ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் உண்டு!என்ன செய்வது?பெற்றோர்களைச் சொல்வதா?கல்விச்சாலைகளைச் சொல்வதா?மாறி வரும் மனித நாகரீகத்தை சொல்வதா?
அந்த அனாமதேயரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை!ஏதோ சிங்களவன் ஒழுக்கசீலன் போலுள்ளது இது!!!!!!!!!!!!!!ஏன் புலம்பெயர் நாடுகளில் காவல்துறையினர் செயலிழந்து போயுள்ளனரோ?தமிழர்களுக்கான அமைப்புகள் எவையும் இல்லையோ??????????
Post a Comment