
பிரித்தானியாவின் படையைச் சேர்ந்த டிப்பிரசாத் பன் என்னும்கூர்க்கா படைவீரர் ஆப்கானிஸ்தான் போர் முனையில் தனித்து நின்று 30தலிபானகளுக்கு எதிராகப் போரிட்டுள்ளார். இரவு நேரம் ஒரு கண்காணிப்பகத்தில் (Sentry) இவர் தனித்து காவலுக்கு நின்ற வேளை ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்தது. முதலில் அது ஒரு மாடாகவோ அல்லது கழுதையாகவோ இருக்கலாம் என்று அவர் நினைத்தார். பின்னர் கூரை மீது ஏறிச் சென்று பார்த்தபோது தீவிரவாதிகள் இருவர் நிலத்தை தோண்டிக் கொண்டிருப்பதை அவதானித்தார். உடனடியாக தன்னிடம் இருந்த ஆயுதங்களைப் பாவித்து அங்கு இருந்த 30 தலிபான் போராளிகள் மீதும் மேலிடத்துக்கு தகவல் கொடுத்தபடியே தாக்குதலைத் தொடுத்தார். 400ரவைகள் 17கைக்குண்டுகள் ஆகியவற்றைப் பாவித்து தாக்குதல் நடாத்தினார். தன்னிடம் இருந்த ஆயுதங்கள் முடிந்த நிலையில் துப்பாக்கியின் முக்காலியால் எஞ்சி இருப்பவர்களைக் காலிசெய்தார்.
கூர்க்கா வீரன் டிப்பிரசாத் பன் இன் குடும்பம் மூன்று தலைமுறையாக பிரித்தானியப்படையில் பணியாற்றி வருகிறது. இந்தியா பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சி (காலனி) நாடாக இருந்த போது பிரித்தானியாவிடம் கூர்க்கா படைப்பிரிவு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அவர்களை அவர்களின் வீரத்திற்காக பிரித்தானியா தன்னுடனேயே வைத்துக் கொண்டது நீண்டகாலமாக பிரித்தானியப் படையில் பணியாற்றிய கூர்க்கா படை வீரர்கள் பலத்த போராட்டத்தின் பின்னரே 2004இல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றனர்.
No comments:
Post a Comment