
என் வாக்கிற்கு
நான் கேட்பது
உதட்டில் ஒரு இலவசம்
இதயத் தொகுதிக்கு
தாக்கல் செய்யும் வேட்பு மனு
உன் கண்ணில் என் பார்வை
உன் உடலெங்கும்
என் உதடு
செய்யத் துடிக்கிறது
பேரணி

உன் உள்ளத்தில்
வேண்டாம் கோஷ்டிச் சண்டை
ஒரு மனதாக் தேர்ந்தெடு என்னை
நீ காங்கிரஸ் என்றால்
நான் மம்தா அல்ல
மானமிழந்து நிற்கும்
கருணாநிதி நான்.
நான் அனுப்பும்
குறுந்தகவல்கள்
உன் உள்ளத் தேர்தலுக்கு
என் தேர்தல் அறிக்கை

உன் இதயத்தில்
நான் கேட்கும் இட ஒதுக்கீடு
அறுபத்து மூன்றல்ல சகலதும்
எம் கூட்டணி வித்தியாசமானது
கல்யாணத் தேர்தலின் பின்
கட்டில் கூட்டணி
என்பெற்றோர் சம்மதிக்கவில்லை
உன் பெற்றொருக்குப் பிடிக்கவில்லை
நாம் அமைப்போம் மூன்றாம் அணி
1 comment:
உன் உடலெங்கும்
என் உதடு
செய்யத் துடிக்கிறது
பேரணி
super...
Post a Comment