Thursday, 3 March 2011

அதிகரிக்கும் எரி பொருள் விலைகள்


தற்போது $110 இற்கும் $120 இற்கும் இடையில் இருக்கும் ஒரு பீப்பாய் எரிபொருள் விலை $220ஆக ஏறும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த விலை அதிகரிப்பு எதிர்பார்பிற்கான காரணங்கள்:

மத்திய கிழக்கு நெருக்கடி.
துனிசியா, எகிப்த்து, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும் அவை மற்ற எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு முக்கியமாக சவுதி அரோபியா, ஈரான் பரவலாம் என்ற அச்சமும் எரிபொருள் விலையை அதிகரித்தது. பாஹ்ரெயினில் நிலமை மோசமடையாமல் போனது எரிபொருள் விலை அதிகரிப்பைத் தணித்தது உண்மை. வெனிசுலேவியா முன் வைத்த சமாதானத் திட்டத்திற்கு லிபிய அதிபர் கடாபி ஒத்துக்கொண்டுள்ளதாக இன்று செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தாம் கடாபி பதவி விலகும் வரை ஓயப் போவதில்லை என்று கூறியுள்ளனர். லிபிய எரிபொருள் உற்பத்தி இப்போது வழமையில் பாதியே செய்யப்படுகிறது. லிபியாவில் உற்பத்தியில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் குறைந்து உள்ளதாக பன்னாட்டு வலு முகவரகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 11-ம் 20-ம் திகதிகளில் சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுவும் எரிபொருள் விலைகள் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. இரசியா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கிம் என்று சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால் அது மத்திய கிழக்கில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பைச் சரிசெய்தால் எரிபொருள் விலை அதிகரிப்பைக் குறைக்கலாம்.

வளரும் சீனப் பொருளாதாரம்.
உலக அரங்கில் ஏற்பட்டபொருளாதர நெருக்கடியைத் தொடர்ந்து சீனாவின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்திருந்தது. அது மீண்டும் விரைவில் வளர்ச்ச்சிப்பாதையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது எரிபொருளுக்கான தேவையை அதிகரித்து எரி பொருள் விலைகளை மேல் நோக்கித் தள்ளும் என்ற எதிர்பார்ப்பே பலமாக இருக்க்கிறது.

பலவீனமான அமெரிக்க டொலர் நாணயம்.
எரிபொருள்களின் விலைகள் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி எரிபொருள்களின் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டொலரின் பெறுமதி குறையும் போது எரிபொருள்களின் விலை அதிக்கரிக்க்கும். அமெரிக்க டொலர் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் பெறுமானத் தேய்வடையும் சாத்தியங்களே அதிகம். இது எரிபொருள் விலைய அதிகரிக்கும்.

1 comment:

சக்தி கல்வி மையம் said...

ஐயோ சாமி இந்தவிலைக்கே பஜ்ஜெட் உதைக்குது...இன்னுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...