பேராசிரியர் அரசேந்திரன் அவர்கள் தீட்டிய இரங்கல் கவிதையின் வரிகள்:
உலகத் தமிழரெல்லாம் உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம் பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று
உரைக்கும் சொல் ஒன்று
கொள்ளி வைப்பானா பிள்ளை?
கொள்ளி வைப்பானா பிள்ளை?
எனக் கோடி முறை நினைந்து
நனைந்திருப்பாய்,
நலிந்திருப்பாய் நாடி தளர்ந்திருப்பாய்
கொள்ளி வைப்பான் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடை இடியாய் முழக்கமிட்டுக்
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டுக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொண்ட உன் தவம் பலிக்கும்
தாயே,
கோடி ஆண்டு உன் பெயர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலை தாழ்ந்த வணக்கங்கள்.
No comments:
Post a Comment