Tuesday, 1 March 2011

நகைச்சுவைக் கதை: இத்தாலிச் சனியாளின் இறுதி நாள்.


ஒரு நாள் இத்தாலிச் சனியாள் காலையில் எழுந்து தனது கருவாட்டு முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். முகத்தில் பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தான் விரைவில் மண்டையைப் போட்டுவிடுவேனோ என்றபயம் சனியாளைப் பிடித்துக் கொண்டுவிட்டது. தன் மகனை அரசனாக்கி டில்லி அரியாசனத்தில் அமர்த்திப் பார்க்காமல் போய்த் தொலைந்து விடுவேனோ என்ற பயம் அவள் மனதை ஆட்டிப் படைத்தது. நீண்ட நேரம் அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

சனியாளது உதவியாளர்கள் நீண்ட நேரம் அவள் படுக்கை அறையில் இருந்து வெளிவராததால் பயமடைந்து அவள் மகளையும் மகனையும் தொடர்பு கொண்டனர். கதவில் நன்றாக உரக்கத் தட்டுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். பிறகு ஒரு உயர் அதிகாரி தொலைபேசி மூலம் சனியாளைத் தொடர்பு கொண்டார். அவரிடம் தனது உயர் மட்ட ஆலோசகர்களையெல்லாம் உடன் கூட்டும்படி கட்டளையிட்டாள். சகல உயர் மட்ட ஆலோசகர்களும் வந்தபின் அவர்களிடம் தான் எப்போது இறப்பேன் என்று கேட்டாள். அவர்கள் எல்லோரும் கூடி ஆலோசித்து விட்டு உடனடியாக ஒரு அரச படை விமானம் ஒன்றில் கேரளாவில் இருந்து ஒரு சோதிடரை டில்லிக்கு அழைத்தனர். சோதிடரும் தன்னிடம் இருந்த சனியாள் குடும்ப சோதிடப் பத்திரங்களுடன் டில்லி போய்ச் சேர்ந்தார்.

சனியாள் சோதிடரிடம் எனது குடும்பம் எந்தளவு பெரிய குடும்பம். எவ்வளவு செல்வாக்கு மிகுந்த குடும்பம். இருந்தும் யாரும் நிம்மதியாக இல்லையே. இது ஏன் என்று சோதிடரிடம் கேட்டாள். அதற்கு சோதிடர் நான் நீண்ட நாளாகவே உங்களிடம் ஒன்ற சொல்ல வேண்டும் என்றிருந்தேன் ஆனால் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றார். அதற்கு சனியாள் எனது வாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் பல நாட்கள் இருப்பேன் என்று நினைக்க வில்லை. எதுவாகிலும் பயப்படாமல் சொல்லு என்றாள். மடம் உங்கள் குடும்பத்திற்கு பெரியதோர் பிதிர் சாபம் உண்டு அதாவது Curse by your foreparents உள்ளது. உங்கள் குடும்பம் foreparentsஇன் பெயரைத் தூக்கி எறிந்து விட்டு உங்கள் குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு மகானின் பெயரைக் குடும்பப் பெயராக்கி கொண்டது. இதனால் உங்கள் குடும்பத்தின் மூதாதையரையும் கேவலப் படுத்தி அந்த மகானையும் கேவலப்படுத்தி விட்டார்கள் உங்கள் குடும்பத்தினர். இந்தச் சாபத்தால் உங்கள் குடும்பத்தில் பலருக்கு அற்ப ஆயுளில் அவலச் சாவு ஏற்பட்டது இந்தச் சாபத்திற்கு எந்தவித பரிகாரமும் இல்லை என்று சொல்லி முடித்தார்.

சோதிடர் கூறுவதைக் கேட்ட சனியாள் சில நிமிடங்கள் தனது கருவாட்டு மூஞ்சியைத் தொங்கப் போட்டபடி அமைதியாக இருந்தாள். பின்னர் கேட்டாள் நான் எப்போது இறப்பேன் என்று. சோதிடர் மீண்டும் ஒரு முறை அவளது கட்டத்தைப் பார்த்துவிட்டு இன்று எனக்குத்தான் கட்டம் சரியில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மடம் நீங்கள் இந்தியாவில் ஒரு புனித நாளில் இறப்பீர்கள் என்றார். அவள் அது எப்போது என்று கேட்டாள். அதற்குச் சோதிடர் அதை என்னால் கூற முடியாது நீங்கள் ஒரு புனித நாளில் இறப்பீர்கள் என்றார். மீண்டும் சனியாள் கேட்டாள் நான் எப்போதைய்யா மண்டையைப் போடுவேன். அதற்கு மீண்டும் சோதிடர் சொன்னார் நீங்கள் இந்தியாவில் ஒரு புனித நாளில் இறப்பீர்கள். இந்த ஆள் சரிப்பட்டு வரமாட்டான் என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சனியாள் சரி போய்வாருங்கள் என்றாள்.

சோதிடர் தனக்குள் நினைத்துக் கொண்டார் "சனியனே நீ என்றைக்கு மண்டையைப் போடுகிறாயோ அதுதான் இந்தியாவின் புனித நாள். எல்லா இந்திய மக்களும் அன்று புனித நீராடி இந்தியாவின் பாவத்தைப் போக்க வேண்டும்."

3 comments:

bala said...

i think this is Sonia Gandhi correct

YOGA.S.Fr said...

///சனியனே!நீ என்றைக்கு மண்டையைப் போடுகிறாயோ அது தான் இந்தியாவின் புனித நாள்.எல்லா இந்திய மக்களும் அன்று புனித நீராடி இந்தியாவின் "பாவத்தை"போக்க வேண்டும்!////ஈழத் தமிழ் மக்களுக்கும் அது"ஒரு"புனித நாளாகவே இருக்கும்!

tamilan said...

புனித நீராட "கங்கை" சரியாகப்படவில்லை. வேறு மாற்று வ‌ழி கூறுங்கள்.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===> புனித நீராட "கங்கை" சரியாகப்படவில்லை. புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...