Friday, 11 February 2011
உண்மைச் சம்பவம்; முதல் முத்தத்தில் உயிரை விட்ட 18 வயது மாணவி
அவள் ஒரு மிகவும் கூச்ச சுபாவமுள்ள கல்லூரி மாணவி. விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடையவள். 18வயதான ஜெம்மா பெஞ்சமின். மூன்று மாதங்களாக அவருக்கு ஒரு சக மாணவனுடன் காதல்.
காதலர்கள் வாரத்தில் இருமுறை சந்தித்துக் கொள்வர். அன்று வழமையான சந்திப்பு. உணவகம் சென்று உணவருந்த இருவரும் விரும்பினர். தனது வங்கி அட்டையை காதலன் றொஸ் மறந்துவிட்டு வந்து விட்டான். இருவரும் றொஸ் விட்டிற்கு சென்றனர் வங்கி அட்டையை எடுக்க. றொஸ் வீட்டில் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். றொஸ் செய்தது தன் காதலியை அணைத்து ஆசையாக ஒரு முத்தம் கொடுத்ததுதான்.
ஜெம்மாவை ஆசையாக முத்தமிட்ட காதலனுக்கு அதிர்ச்சி. ஜெம்மா காக்கை வலிப்பு வந்தது போல் துடித்தாள். றொஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கும் ஜெம்மாவின் தாய்க்கும் தொலை பேசி அழைப்பு விடுத்தான். அவசர சிகிச்சைப் பிரிவினர் வந்து கொண்டிருக்கும் போதே றொஸ்ஸிற்க்கு எப்படி முதலுதவி சிகிச்சை செய்வது என்று விளக்கினர். அவனும் அப்படியே செய்தான். பாவம் ஜெம்மா. அவள் உயிர் பிரிந்து விட்டது.
ஜெம்மாவிற்கு cardiac condition SADS, or Sudden Adult Death Syndrome என்னும் இருதய நோய் இருந்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அடே லவ் பண்றன்னு கொன்னுட்டியேடா பாவி.!!!
அந்தப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறான்...
Post a Comment