Monday 10 January 2011

பாட்டுக் கேட்பதில் உள்ள சுகம் பலான சுகம் போன்றதாம்


இசை கேட்டால் புவி அசைந்தாடும்......
இசையால் வசமாக இதயம் எது...........

இந்த மாதிரி எல்லாம் பாடக் கேட்டதுண்டு. இசை கேட்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

இசை கேட்கும் போது ஏற்படும் இன்பத்தைப் பற்றி கனடாவின் McGill University in Montreal ஒரு ஆய்வு நடாத்தியது.

நாம் ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவிக்கும்போதும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து எமக்குக் கிடைக்கும் இன்பத்தை அளவீடு செய்யலாம். இந்த அளவீட்டை ‘chills’ என்கிறார்கள். இந்த அளவீடு இருதயத் துடிப்பு, மூச்சுவிடுதல், உடல் வெப்ப நிலை, தோல் கடத்தும் மின்சார அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்.

கனடாவின் McGill University in Montreal இசை கேட்பவர்களைன் மூளையை பரிசோதனை செய்தது(brain scan). அவர்களின் ஆய்விகளின் முடிவுகளை Nature Neuroscience சஞ்சிகையில் வெளியிட்டனர். அவர்களின் ஆய்வில் மூளை வெளிவிடும் Dopamineஐயும் அளவிட்டனர்.( Dopamine is a neurotransmitter, a biochemical that helps nerve cells transmit signals to each other.)

ஆய்வுகளின் முடிவின்படி எமக்குப் பிடித்த இசையைக் கேட்க்கும் போது நாம் அடையும் இன்பம் உடலுறவு, சுவையான உணவு, பணம், சில போதைப் பொருட்களால் எமக்குக் கிடைக்கும் இன்பத்தைப் போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு கிரியைகளின் போதும் விளம்பரங்களின் போதும் இசை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் விளக்குகின்றது.

திரைப்படங்களில் பின்னணி இசை எம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இந்த ஆய்வினால் விளக்கம் கிடைக்குமாம்.

'If music-induced emotional states can lead to dopamine release, as our findings indicate, it may begin to explain why musical experiences are so valued.

'These results further speak to why music can be effectively used in rituals, marketing or film to manipulate hedonic states.

'Our findings provide neurochemical evidence that intense emotional responses to music involve ancient reward circuitry and serve as a starting point for more detailed investigations of the biological substrates that underlie abstract forms of pleasure.'

3 comments:

Anonymous said...

பலான சுகம்தான்...

Anonymous said...

பாட்டுக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதானே...மக்கள் தொகையைக் கூட்டாமல்....

Anonymous said...

எல்லாமே கிக்குகள் தான்....ஆனால் வேறுபட்டவை...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...