G-20 நாடுகள் என்ற அமைப்பு 1999-ம் ஆண்டு ஆசிய நாடுகள் 1990களில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து உலகின் முன்னணிப் பொருளாதர வல்லமை உடைய இருபது நாடுகளின் நிதி மந்திரிகளும் மத்திய வங்கிகளி ஆளுனர்களும் கூடி உருவாக்கப்பட்டது. இதில் உள்ள நாடுகள்:
Argentina, Australia, Brazil, Canada, China, France, Germany, India, Indonesia, Italy, Japan, Mexico, Russia, Saudi Arabia, South Africa, Republic of Korea, Turkey, U K and USA.
வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் எழுச்சியடையும்(emerging economies) நாடுகளிற்குமிடையிலான பொருளாதர வளர்ச்சி வீதத்தில் இப்போது பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரம் 2.2% வளர்ச்சியையும் எழுச்சியடையும் நாடுகளின் பொருளாதாரம் 6.4% வளர்ச்சியையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எழுச்சியடையும் நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சிக்கு வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை நம்பியுள்ளன.
வளர்ச்சியடைந்த நாடுகள் இபோது பாரிய உள்ளூர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அவை தமது வட்டி வீதத்தை தாழ் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இது அந்த நாடுகளின் நாணயத்தின் பெறுமதியை தாழ் நிலையில் வைத்திருக்கும். இது அவற்றின் ஏற்று மதியை அதிகரிக்கும் இறக்கு மதியைக் குறைக்கும். இது சீனா, இந்தியா, பிரேசில் நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இதனால் சீனா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்திருக்க முயல்கின்றன. பல நாடுகள் தமது நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்திருக்கும் போட்டியில் ஈடுபடுவதை நாணயப் போர் என்கின்றனர். இந்த நாணயப் போர் உலக வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் மத்தியில் G-20 நாடுகளின் மாநாடு தென் கொரியத் தலைநகர் செயோலில் நடந்தேறியுள்ளது.
- நாணயப் போரின் பின்னணி:ஒரு பிரித்தானியப் பவுண்டின் பெறுமதி இந்திய ரூபாவிற்கு எதிராக £1=Rs75 என்று இருக்கையில் இந்தியாவில் 15000ரூபா பெறுமதியான ஒரு சேலையை பிரித்தானியாவில் இருநூறு பவுண்களுக்கு வாங்க முடியும். ரூபாவின் பெறுமதி £1=Rs100 என்று விழ்ச்சியடைந்தால் அச்சேலையின் விலை நூற்றைம்பது பவுண்களாகும். இதனால் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும் இலங்கையர்களும் அதிக சேலைகளை வாங்குவர். இது இந்தியச் சேலை உற்பத்தியை அதிகரிக்கும். இப்படிப் பல இந்தியப் பொருட்கள் பிரித்தானியாவில் அதிகம் விற்கப்பட இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இப்பின்னணியிலேயே நாடுகள் தமது நாணயப் பெறுமதியை குறைந்த மதிப்பில் வைத்திருக்க முயல்கின்றன.
மேற்கு நாடுகளும் சரவ தேச நாணய நிதியமும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே குறைத்து வைத்திருக்கின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர். சீனா தனது நாணத்தின் பெறுமதியைக் கூட்டினால் அதன் ஏறுமதி வீழ்ச்சியடைந்து தனது நாட்டில் பலர் வேலையிழக்க வேண்டிவரும் என்று கூறுகிறது. அப்படிச் செய்தால் அது தனது நாட்டு மக்களின் கொள்வனவு சக்தியை குறைவடையச் செய்யும் அது மேற்கு நாடுகளின் ஏற்று மதியையும் பாதிக்கும் என்று வாதிடுகிறது.
பன்னாட்டு நாணய நிதிய முறைமை பெரிதும் நலிவடைந்துள்ள நிலையில் நாணயப் போர் பெரிய நிதி நெருக்கடியை பல நாடுகளில் ஏற்படுத்தும் என்ற அச்சம் இப்போதும் பொருளாத நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஓரம் கட்டப்பட்ட அமெரிக்கா
நாடுகள் தங்கள் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசத்தை தங்கள் பொருளாதார உற்பத்தியின் 4%இற்கு உள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வேண்டுதல் முன்னணி ஏற்றுமதி நாடுகளான சீனாவினதும் ஜெர்மனியினதும் எதிர்ப்பால் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு பிரித்தானியா கூட ஆதரிக்கவில்லை. பிரித்தானிய சீனாவை தாஜா பண்ணி அங்கு தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டது.
முக்கியமாக G-20 நாடுகள் தமக்கிடையிலான பொருளாதார வளர்ச்சி சமநிலையின்மை நிலையை அடைந்துள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதில் உடன்படவில்லை. இந்த உடனபாடு இல்லாமல் நாடுகளுக்கிடையிலான வளர்ச்சி சமநிலையின்மையை அடைவதை தடுக்க முடியாது.
அண்மைக்காலங்களில் G-20 குழுமம ஐநா பாதுகாப்புச் சபையை ஓரங்கட்டிவிடுமா என்று சந்தேகப் படும் அளவுக்கு அவை பல உடன்பாடுகளைக் கண்டிருந்தன. 2009இல் ஏற்பட்ட உலகப் பொருளாதரச் சரிவை G-20 நாடுகளின் கூட்டமைப்பு சரிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாணயப் போர் மீண்டும் உலக நாணய நெருக்கடியை ஏற்படுத்தும்.
போர் நிறுத்த ஒப்பந்தங்களின் பின்னர் பெரும் போர் நடக்கும்
கொரியாவில் நடந்த G-20 நாடுகளின் மாநாடு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் என்று கருதப்பட்டாலும், பல போர் நிறுத்த ஒப்பந்தங்கள் பேரழிவுப் போரில் முடிவடைவதைப் பார்த்திருக்கிறோம். சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டு ஒன்றுக் கொன்று குழிபறிக்கக் காத்திருக்கும் நிலையில் எதுவும் நடக்கலாம்.
No comments:
Post a Comment