Wednesday, 10 November 2010

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் வேறு நாடுகளில் கைது செய்யப்படும் அபாயம்.


முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் வேறு நாடுகளில் கைது செய்யப் படலாம் என்ற அபாயத்துக்கு உள்ளாகி உள்ளார்.

அவர் தனது சுயசரிதையில் போலி நீர் முழ்கடிப்புச் சித்திரவதை அமெரிக்காவில் செய்யப்பட்டதை ஒத்துக் கொண்டுள்ளதுடன் அதை ஆதரித்தும் எழுதியதால் வந்த வினை இது.

ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கைடா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:
The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.

சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை.

இந்தச் சித்திரவதை மூலம் அல் கைடா கைதிகளிடமிருந்து முக்கிய தகவலகளை அமெரிக்க உளவுத் துறை பெற்றுக் கொண்டது. முக்கியமாக பிரித்தானிய Heathrow விமான நிலையம் Canary Wharfபெரு வர்த்தக நிலையம் ஆகியவற்றில் அல் கைடா நடத்த இருந்த தாக்குதல்கள் முன்கூட்டியே அறியப்பட்டு பெரும் அழிவுகள் தடுக்கப்பட்டனவாம்.

இந்தச் சித்திரவதையை பகிரங்கமாக ஒத்துக் கொண்டதால் பல நாடுகளிற்கு பயணம் செய்தால் கைது செய்யப்படும் ஆபத்தை ஜோர்ஜ் புஷ் எதிர் கொள்கிறார்.

இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என அண்மையில் செய்திகள் வந்தன. 1998இல் சிலியின் சர்வாதிகாரி ஸ்பானிய சிலியில் வாழும் ஸ்பானிய மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்தமைக்காக அவரை ஸ்கொட்லண்ட்யாட் கைது செய்தது.

அண்மையில் பிரித்தானிய வரமுயன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அங்கு கைது செய்யப்படலாம் என்றபயத்தில் ஹீத்துரு விமான நிலையம் வரை வந்து விட்டுத் திரும்பிச் சென்றனர். இப்போது இதே பயம் ஜோர்ஜ் புஷ்ஷிற்கும் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை சட்ட நிபுணர்கள் பல நாடுகளில் ஜோர்ஜ் புஷ் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...