Wednesday 10 November 2010

கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்பட்ட இந்திய மக்களாட்சி


ஒரு நல்ல மக்களாட்சி நிலவுகின்ற நாடு என்று ஒரு உலகில் எங்கும் இல்லை. தம்மை மக்களாட்சி நாடுகள் என்று சொல்லிக் கொள்கின்ற நாடுகளின் ஆட்சியாளர்களை அங்குள்ள பணமுதலைகள் தான் நிர்ணயம் செய்கின்றனர்.


இந்தியாவும் ஒரு மக்களாட்சி நாடு என்று சொல்லப்படுகிறது. இந்திய ஆட்சியாளர்களை குடும்பப் பின்னணியும் பணமுதலைகளும் சாதியமைப்பும் தீர்மானம் செய்கின்றன. சில மேற்கத்திய நாடுகளின் அரசியல் கட்சிகளுக்குள் நல்ல மக்களாட்சித்தன்மை நிலவுகின்றது. அங்கு குடும்ப ஆதிக்கங்கள் இல்லை என்றே சொல்லலாம். இதன் அடிப்படையிலேயே பிரித்தானித் தொழிற் கட்சியின் தலைவராக அக்கட்சியின் தொழிலாள உறுப்பினர்களின் ஆதரவுடன் எட் மில்லிபாண்ட் தெரிந்தெடுக்கப் பட்டார். அவருக்குப் பின்னனியாக எந்த ஒரு குடும்பமோ அல்லது பண முதலைகளோ இருக்கவில்லை. இந்தியாவில் நிலைமை வேறு. முக்கிய கட்சிகள் எதாவது ஒரு குடும்பத்தின் பிடியிலேயே இருக்கின்றன.

உலகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில்
சோனியா-9ம் இடம் மன் மோகன் சிங் - 18
ம் இடம்

உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் சீனத் தலைவர் முதலாம் இடத்திலும் அமெரிக்கத் தலைவர் இரண்டாம் இடத்திலும் சவுதி அரேபிய மன்னர் மூன்றாம் இடத்திலும் இரசிய தலைவர் நான்காம் இடத்திலும் போப் ஆண்டவர் ஐந்தாம் இடத்திலும் ஜெர்மனித் தலைவர் ஆறாம் இடத்திலூம் பிரித்தானியப் பிரதமர் ஏழாம் இடத்திலும் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) தலைவர் எட்டாம் இடத்திலும் சோனியா காந்தி ஒன்பதாம் இடத்திலும், பில் கேட் பத்தாம் இடத்திலும் இருக்கின்றனர். பாவம் மன்மோகன் சிங் 18-ம் இடத்தில் இருக்கிறார். இந்திய ஆயுத வலிமை படைத் தொகை எண்ணிக்கை மொத்தப் பொருளாதார உற்பத்தி என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்தியப் பிரதமர் முதல் ஐந்துக்குள் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியில் உள்ள குடும்ப ஆதிக்கம் இந்தியப் பிரதமரை 18இடத்தில் வைத்திருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் அதன் பாராளமன்றத்திடம் இருக்க வேண்டியது. அதன்படி பிரதம மந்திரியின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அதிகாரம் ஆளும் கட்சித் தலைவியிடம் இருக்கிறது. இது இந்திய மக்களாட்சியை கேள்விக்குரியதாக்குகிறது. ஆளும் கட்சி ஒரு குடும்பத் தலைவியிடம் இருக்கிறது. இது இந்திய மக்களாட்சியை கேலிக்குரியதாக்கிவிட்டது.

இந்தியாவிற்குப் பயணம் மேற் கொண்ட பராக் ஒபாமாவும் இந்திய ஆட்சியாளர்கள் தன் அயலில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு இருப்பதை நல்ல மக்களாட்சிப் பண்பு அல்ல என்று சுட்டிக் காட்டியுள்ளார்:

  • When peaceful democratic movements are suppressed, as they have been in Burma (Myanmar), then the democracies of the world cannot remain silent. Faced with such gross violations of human rights, it is the responsibility of the international community, especially leaders like the United States and India, to condemn it.

ஐயா ஒபாமா அவர்களே அயல் நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருந்தால் பாரவாயில்லை. பாங்காளியாக இருக்கிறதே!

4 comments:

Anonymous said...

வெறும் டம்மி மன்மோகன் சிங்கிற்கு எப்படி 18-ம் இடம்????
ஏதோ தப்பு நடந்திருக்கிறது

Anonymous said...

அழகிரி அண்ணாச்சிக்கு எத்தனையாவது இடமுங்க?

Anonymous said...

ஒரு இனக் கொலையாளிக்கு 9வது இடமா?????

Anonymous said...

velinaatu mogam nammidaiye irukkum varai, nammai naam aazhap povadhu millai. 2oo varudangal adimaigalai irundhathal innum adimai pudhi nammai vittu poga villai. nam suya mariyathaiyai enru unargiromo andru thaan unmayana jananayagam malarum

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...