Wednesday 2 June 2010

இலங்கை இனக்கொலை: இந்திய மருத்துவரின் மூடி மறைப்பு


தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இந்திய மருத்துவர் ஒருவர் இலங்கையின் இறுதிப் போர்பற்றி இந்துஸ்த்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் இறுதிப் போரின் போது இலங்கைக்கு இந்தியாவால் அனுப்பப்பட்டு கடமையாற்றியவர். இறுதி மாதங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.

  • நீங்கள் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை?
  • உண்மை தெரிவித்ததற்காக உங்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
  • உண்மை தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் உங்களைக் கடமையில் ஈடுபடுத்தினரா?
  • இந்தியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் மனித உறுப்புத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிப்பதை நீங்கள் அறியவில்லையா?
  • இலங்கையில் இருபதினாயிரம் இந்தியப் படைகள் இனக்கொலையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • இலங்கையில் தடைசெய்யப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
  • சீனாவிற்கு பத்தாயிரம் மனித உறுப்புக்கள் அனுப்பப் பட்டன என்று தெரிவிக்கப் படுவதையிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • காயமடைந்து இந்தியப் மருத்துவர்களிடம் வந்தவர்களில் விடுதலைப் புலிகளும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் வேண்டுமென்றே காயப்பட்ட கைகள் அல்லது கால்கள் துண்டிக்கப்பட்டனர் என்று கூறப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
  • போரில் அகப்பட்டவர்களுக்கு உணவு அனுப்பாமல் இலங்கை அரசு தடை செய்ததை உங்களிடம் எந்த நோயாளியும் சொல்லவில்லையா?
  • செஞ்சிலுவைச் சங்கம் உணவு கொண்டுவந்த போது அதன் கடற்கலங்கள்மீது இலங்கை அரசு பலமுறை தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
  • உண்மையில் நடந்தவை நீங்கள் சொல்பவற்றிலும் மிக மோசமானது. நீங்கள் உண்மை நிலைமையை குறைத்துக் கூறுகிறீர்களா?
  • உணவிற்காக வரிசையில் நின்ற மக்கள்மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிவீர்களா?இவற்றில் எதையும் தெரிவிக்காமல் நீங்கள் மூடி மறைக்கிறீர்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...