
இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக பாலித கோஹென்ன நியமிக்கப் பட்டபோது அவர் தனது அமெரிக்காவிற்கான பயணத்தை பிரித்தானியாவினூடாக மேற் கொள்ளும் பொருட்டு தனது பயண அனுமதி வேண்டி கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவராலயத்திற்கு விண்ணப்பித்தார். பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரது பயண அனுமதிக் கோரிக்கையை நிராகரித்தது.
இலங்கை அமைச்சர் தயாசிறி திசேரா சென்ற வாரம் தமிழ்நாட்டுக்கு சென்று அன்னை வேளாங்கண்ணியை தரிசித்து விட்டு சென்றுள்ளார். அவருக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் பலத்த பாதுகாப்பு வழங்கின.
இந்தியாவில் வாழும் பலகோடி மக்களின் உணர்விற்கு இந்தியா அளிக்கும் மதிப்பு என்ன? அல்லது தமிழர்களுக்கு உணர்வே இல்லை என்று இந்தியா கருதுகிறதா?
இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சில நூறுதமிழர்கள் மட்டும் அங்கு சென்றது ஏன்? ஏன் ஆயிரக் கணக்கில் செல்லவில்லை? நாம் தமிழர் இயக்கம், புதிய தமிழகம் உட்பட ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்க மற்றவை ஒதுங்கி இருந்தது ஏன்?
இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது செய்யப் பட்டமை தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதா?
7 comments:
தமிழனுக்கு உணர்வு இருக்கிறதா? மதிக்கிறதுக்கு.....
இலங்கையில் திரைப்பட விழா நடாத்த வேண்டும் என்று இந்தியா கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது...
ஒரு மானம் கெட்ட நாட்டிடம் இருந்து நீதியை எதிர்பார்க்கிறீர்களா????
வடநாட்டான் தமிழர்களை தாழ்ந்த சாதியாகவே நினைக்கிறான்...இதில் உணர்வுகளை மதிப்பது எப்படி????
India!!! respecting Tamils' feelings!!!! Are you joking????
தமிழனுக்கு உணர்வா? என்று ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்க கூடாது. நீங்களும் அதில் ஒரு பங்குதாரர் தான்
தமிழனுக்கு உணர்வு இருந்தால் ஏன் இந்தக் கதி......என்னையும் சேர்த்துத்தான்...நானும்பங்குதாரர்தான்...
Post a Comment