இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி+ வர்த்தகச் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானம் இதனால் ஆண்டு தோறும் கிடைக்கிறது. 100,000 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். Marks & Spencer உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இடை நிறுத்தம் இலங்கை பொருளாதரத்திற்கு விழும் ஒரு அடியாகும்.
சவுதி அரேபியா இலங்கைப் பணிப்பெண்களுக்குத் தடை.
சவுதி அரேபியா திடீரென இலங்கைப் பணிப்பெண்களுக்குத் தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மூன்று இலட்சம் இலங்கைப் பணிப்பெண்கள் வேலை செய்கின்றனர். இதனால் இலங்கைக்கு ஆண்டு தோறும் எழுபது மில்லியன் டொலர் வருமானக் கிடைக்கிறது. இலங்கை பெண்கள் கொலை சிறுவர் மீதான வன்முறை மற்றும் கலாச்சார விரோத நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் இந்தத் தடை என்று சவுதி தரப்பில் சொல்லப்படுகிறது. இது அண்மைக் காலங்காளில் இலங்கை பொருளாதரத்துக்கு விழுந்த அடுத்த அடியாகும்.
No comments:
Post a Comment