விக்கிலீக் என்னும் இணையத்தளம் அமெரிக்க அரசின் பல அந்தரங்க தகவல்களை பகிரங்கப் படுத்தி அமெரிக்க ஆட்சியாளர்களை பெரும் நெருக்கடுக்குள்ளாக்கியுள்ளது. அது வெளியிட்ட 250,000 தகவல்களுள் முக்கியமான வை:
சவுதி அரேபிய மன்னர் அமெரிக்காவை ஈரானின் மீது வான் தாக்குதல் நடத்தும் படி வல்லியுறுத்தினார். இந்தத் தகவல் மத்தியகிழக்கிலும் சில மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்க உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சீன ஆட்சியாளர்கள் பல இணையத்தளங்களை ஊடுருவியமை.
ஹிலரி கிளிண்டன் பல நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதிகளை உளவு பார்க்க உத்தரவிட்டிருந்தாராம். இது பன்னாட்டுச் சட்ட விரோதச் செயல் ஆகும்.
பிரித்தானிய இளவரசர் அண்ட்ரு முறைகேடாக நடந்தமை. பிரித்தானிய சட்ட அமூலாக்க அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்தமை, வெளி நாடு ஒன்றைப் பற்றி தகாத வார்தைகள் கூறியமை.
இரசிய அரசு மாபியாக்களைப் பாவித்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இரசிய அரசை ஒரு மாபியா அரசு எனக் குறிப்பிட்டமை. இரசியத் தலைவர் புட்டீனை alfa நாய் எனக் குறிப்பிட்டமை.
ஆப்கான் தலைவரை ஒரு பயந்தாங் கொள்ளி எனக் குறிப்பிட்டமை.
இஸ்ரேலியப் பிரதமரை elegant & charming என்றும் வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர் என்றும் குறிப்பிட்டமை.
வட கொரியத் தலைவரை குண்டன் என்று விமர்சித்தமை. இரு கொரியாக்களையும் இணைக்கும் அமெரிக்க சதி.
ஈரானியத் தலைவரை ஹிட்லருடன் ஒப்பிட்டமை.
No comments:
Post a Comment